districts

img

குன்றத்தூர் சாலையை அகலப்படுத்த வேண்டும் பல்லாவரம் மாநாடு கோரிக்கை

சென்னை, அக். 27 - குன்றத்தூர் சாலையில் பல்லாவரம் - அனகாபுத்தூர் இடை யேயான பகுதியை அகலப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லா வரம் பல்லாவரம் பகுதி மாநாடு வலியுறுத்தி உள்ளது. கட்சியின் 14வது பகுதி மாநாடு ஞாயிறன்று (அக்.27) குரோம்பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அரசு நிலங்களில் நீண்ட காலம் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். ராதாநகர் சுரங்கப் பாதையை விரைந்து திறக்க வேண்டும். சொத்துவரி  உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு கொடியை மூத்த உறுப்பினர் எம்.சி.பலராமன் ஏற்றினார். பொதுமாநாட்டிற்கு மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி எம்.சி., தலைமை தாங்கினார். பகுதிக்குழு உறுப்பினர் எம்.சந்திரன் வரவேற்றார். ஆர்.ஹேமக்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சுந்தர் துவக்கவுரையாற்றினார். பிரதிநிதிகள் மாநாட்டில் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன் வேலை-அமைப்பு அறிக்கையையும், வரவு செலவு அறிக்கையை பகுதிக்குழு உறுப்பினர் ப.ரேவதியும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ர கலா, மாவட்டக் குழு உறுப்பினர் ம.விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு தேர்வு 13பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக எம்.தாமோதரன் தேர்வு செய்யப்பட்டார்.