districts

img

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி விஸ்வநாதனுக்கு வேலூரில் பாராட்டு விழா சிறப்பு தபால் தலையை ஜி.வி.சம்பத் வெளியிட்டார்

வேலூர், ஜன.11- இந்திய கிரிக்கெட் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினை சிறப்பாக வழி நடத்தியதை கவுரவப்படுத்தும் விதமாக அமெரிக்க நாட்டின் ஹார்ட்போர்டில் அமைந்துள்ள கிரிக்கெட் ஹால் ஆப் ஃபேம் (Cricket Hall of Fame) என்ற அருங்காட்சியகத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அலுவலர்   கே.எஸ். விஸ்வநாதனின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது.  இந்த கவுரத்தை  பெற்றமைக்காக கே.எஸ். விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மாவட்ட செயலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேலூரில் பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் வேலூர் மாவட்ட தலைவரும் நறுவீ மருத்துவமனையின் நிறுவனத் தலை வருமான முனைவர் ஜி.வி. சம்பத் கே.எஸ். விஸ்வநாதனுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.  இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஆர்.எஸ்.இராமசாமி, துணை செயலாளர் டாக்டர் ஆர்.என். பாபா, முன்னாள் துணைத் தலைவர் சாம் பாபு, உதவி செய லாளர்கள் ஜூலியஸ் விஜயகுமார், மார்டின் ராஜ், வெங்கட்ராமன், வேலூர் மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் மாரிஸ்வரன், மற்றும் கிரிக்கெட் சங்க இந்நாள், முன்னாள் நிர்வாகி கள், சாதனையாளர் விஸ்வநாதனை வாழ்த்தி பேசினர். அப்போது அவரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டதுடன், விஸ்வநாதனின் 30 கிலோ எடை கொண்ட திருஉருவச்சிலையை சங்க நிர்வாகிகள் வழங்க அதனை கே.எஸ். விஸ்வநாதன் மற்றும் அவரது துணைவியார் விஜயா விஸ்வநாதன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  இதில் ஜி.கே. வேர்ல்டு பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி, சன்பீம் பள்ளி குழும தலைவர் முனைவர் ஹரி கோபாலன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர். முடிவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க மாவட்ட செயலாளர்கள் கூட்ட மைப்பு தலைவர் பி.கே.ஜி. சுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்.