சென்னை, ஜூன் 15- சென்னையில் ஆர்க்கிட்ஸ் சர்வதேச பள்ளி சார்பில் “கோ காஸ்மோ - யுவர் டிக்கெட் டூ ஸ்பேஸ்” என்ற தலைப்பில் கண் கவர் வானியல் கண்காட்சி நடைபெறுகிறது.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஆர்க்கிட்ஸ் வளாகத்தில் ஞாயிற்றுகிழமை இந்த கண்காட்சி நிறைவுடை கிறது. மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த 3 நாட்கள் பிரபஞ்ச கொண்டாட்டம் நடை பெறுகிறது. அனைத்து வயது விண்வெளி ஆர்வ லர்களும் இதில் கலந்து கொள்ளலாம். விண்வெளி அறிவி யல் ஆர்வத்தை மாண வர்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி யில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு பெங்க ளூர், மும்பை,புனே, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. பள்ளியின் துணைத் தலை வர் அஜித் சிங், கல்வியாளர் டாக்டர். அன்னா மரியா நோரோன்ஹா, பள்ளிக்கரணை வளா கத்தின் முதல்வர் ரஜினி சார்லஸ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.