தொழிலாளர் சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றியதை கண்டித்து மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வேலூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி இனை ஒருங்கிணைப்பாளர் எம்.கோவிந்தராஜ் தலைமை தாங்கினர். செந்தில் (எம்ப்ளாயீஸ் பெடரேஷன்), சின்னதுரை (மின்ஊழியர் மத்திய அமைப்பு), விநாயகம் (என்ஜீனியர்ஸ் அசோசியேஷன்), காமராஜ் (ஐஎன்டியுசி), சுந்தரராஜ் (தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்) கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.