districts

img

சமையலருக்கு தீண்டாமை: 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு!

அரசு பள்ளி சமையலருக்கு நிகழ்ந்த தீண்டாமை வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி திருமலைக்கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி சமையலராக  பாப்பாள் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால், மாற்று சமுதாயத்தை சேர்ந்த குழந்தைகள் அவர் சமைத்த உணவை உட்கொள்ள மாட்டார்கள்  என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை பூட்டினர். மேலும் அவரை பணி செய்யவிடாமல் தடுத்தனர். இது தொடர்பாக தீண்டாமை வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்  வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டதை அடுத்த அந்த நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது.  இச்சம்பவத்தில் 36 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடைபெற்ற போது வட்ட வளர்ச்சி அலுவலராக இருந்த  மீனாட்சி வழக்கிலிருந்து நீக்கப்பட்டார். 4 பேர் உயிரிழந்தனர். 31 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் புகார் மனுதாரர் ஆன பாப்பாள் மற்றும் எதிர்மனுதாரர்கள் 31 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவ்வழக்கிலிருந்து 25 பேரை விடுவித்து , பழனிச்சாமி , சக்திவேல் , சண்முகம் , வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.