districts

சோழிங்க நல்லூர் சிப்காட் இடையே மெட்ரோ ரயில் பணி தொடங்கியது

சென்னை,ஜூலை 6-  

     பழைய மாமல்லபுரம் சாலையில் மெட்ரோ ரயில் பாதை தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் நேரு நகர்-சோழிங்கநல்லூர் மற்றும் சோழிங்கநல்லூர்-சிப்காட் இடையே 2 தனித்தனி ஒப்பந்தங்களாக பணிகள்  மேற்கொள்ளப்படுகிறது. நேருநகர்-சோழிங்கநல்லூர் இடையேயான பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடந்து  வரும் நிலையில் சோழிங்கநல்லூர்-சிப்காட் இடையே பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.