districts

img

1500 தொழிலாளர்களின் பணிபாதுகாப்புக்கு உத்தரவாதம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு: வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 11 - 1500 தொழிலாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய தொழிலா ளர்கள் சங்கம் 15 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி ஜன.20 அன்று வேலை நிறுத்த அறிவிப்பு செய்தி ருந்தது. இதனையடுத்து வாரிய மேலாண்மை இயக்குநர் டாக்டர் டி.ஜி. வினய் உள்ளிட்ட அதிகாரி கள் வெள்ளியன்று (ஜன.10) சங்கத் தலைவர் க.பீம்ராவ், பொதுச்செயலாளர் எம்.பழனி உள்ளிட்டோருடன் பேச்சு நடத்தினார். இதில், வாரியத்தில் உள்ள 1489 தொழிலா ளர்களின் பணி பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். வேலை செய்யும் அதே பகுதியிலேயே தொடர்ந்து வேலை செய்வார்கள். பேரிடர் காலங்களில் மட்டும் அருகில் உள்ள மண்டலங் களுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் பழைய இடத்தி லேயே தொடர்ந்து பணி செய்வார்கள். 1970-ம் ஆண்டு சட்டப் படி கான்ராக்ட் தொழிலா ளர்கள் பணிநிரந்தரம் அர சுக்கு வாரியம் அனுப்பி வைக்கும். ஆலந்தூர் பகுதி யில் 17 பேரை பணி நிரந்த ரம் செய்வது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ளதால் அதன் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பது என்று முடி வெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் மிகைநேர ஊதிய மும், இரவு பணி செய்தால் இரட்டிப்பு சம்பளம் மற்றும் டீ, உணவுப்படி வழங்கப் படும். அரசு விடுமுறை நாட்கள் அல்லது ஞாயிற்று க்கிழமைகளில் மட்டும் வேலை செய்யும் கான்ராக்ட் ஊழியர்களுக்கு 3 மடங்கு ஊதியம் தரப்படும். இரவு நேர சிலிட் ஆட்டோ, ஜெட்ரா டிங் வாகனங்களுக்கு ஒரு உதவியாளர் பணியமர்த் தப்படுவார். வால்வு ஆப்பரேட்டர் களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.900க்கு மேல்  கூலி வழங்கப்படும். கசடு நீக்கும் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது வாரியம் நிர்ணயித்த கூலி யில் எது அதிகமோ அதை வழங்கப்படும். ஆண்டு தோறும் தீபாவளி போனஸ் தொடர்ந்து வழங்கப்படும். 200க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் பொங்கல் முடிந்து ஒரு மாதத்திற்குள் நிறைவேற் றப்படும் என்றும் பேச்சு வார்த்தையில் முடிவானது. இதனையடுத்து ஜன. 20அன்று நடைபெறுவதாக இருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்க ப்படுவதாக சங்கத்தின் தலை வர் க.பீம்ராவ் தெரிவித்துள் ளார்.