செப்டம்பர் 27 அன்று ஸ்பெயின் நாட்டு சிஜிடி (CGT) தொழிற்சங்கம் அறைகூவல் விடுத்ததற்கு இணங்க, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக 24 மணி நேர பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. இஸ்ரேலுடனான அனைத்து அரசியல், பொருளாதார, கலாச்சார உறவுகளையும் ஸ்பெயின் அரசு துண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப் பப்பட்டது. சுமார் 200 தொழிற் சங்கங்கள், மாணவர் அமைப்புகள், சிவில் சமூக குழுக்கள் இதில் பங்கேற்றன. நாடு முழுவதும் 1,50,000 பேர் கண்டன ஊர்வலங்களில் கலந்து கொண்டனர். தலைநகர் பார்சி லோனாவில் மட்டும் 50,000 பேர் தெருக்களில் இறங்கினர். இஸ்ரேலு டன் தொடர்புடைய நிறு வனங்கள் குறிவைக்கப் பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.