கிருஷ்ணகிரி ஜுன் 10- கிருஷ்ணகிரி மாவட்டத்தின் நகர் பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் இருந்து அரிசி மூட்டைகளை குறிஞ்சி மஹால் பகுதியில் ஒன்று சேர்த்து வாகனங்கள் மூலம் பெங்களூருக்கு கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினர் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ரேஷன் அரிசி மூட்டைகளை வாக னங்களில் சிலர் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அது ரேஷன் அரிசி என்பதும், பெங்களூருக்கு கடத்த இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் கருங்கல் செந்தில் குமார், சிங்காரப்பேட்டை விஜய், கிருஷ்ணகிரி ரத்தினவேல், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 12 டன் அரிசையையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.