tamilnadu

ரேசன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது

பொள்ளாச்சி, ஜூலை 16- பொள்ளாச்சி அருகே ரேசன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது செய்யப் பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த மன்னூர் அருகே சனியன்று மாலை குடிமைப்பொருள் வழங்கல் (பறக்கும் படை) குற்றப்புலனாய்வுத் துறை தனி வட்டாட்சியர் சிவக்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது அவ்வழியாக கேரளாவை நோக்கி இருசக்கர வாகனம் அதிவேகமாக சென்றது. இதனைத் தொடர்ந்து வாகனத்தைத் துரத்திச் சென்று பிடித்து சோதனை செய்ததில், இருசக்கர வாகனத்தில் 100 கிலோ ரேசன் அரிசி இருப்பதைக் கண்ட அதிகாரிகள் வாகனத்துடன் பறிமுதல்  செய்தனர். இதேபோல் கோபாலபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 100 கிலோ அரிசியையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் வடுகபாளையத்தைச் சேர்ந்த ஞானசேகர் (30) மற்றும் மாப் பிள்ளை கவுண்டன்புதூரைச் சேர்ந்த அன்சார்அலி (21) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.