பெங்களூரு:
பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போதாது என்பவர்கள் செத்துப் போய் விடுங்கள் என்று, பாஜகவைச் சேர்ந்தஉணவுத்துறை அமைச்சர் உமேஷ் கட்டிபேசியது, கர்நாடக மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ்ரேசனில் வழங்கப்படும் அரிசி குறைக்கப் பட்டது தொடர்பாக, விவசாயி ஒருவர் அமைச்சர் உமேஷ் கட்டியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முறையிட்டுள்ளார். ‘அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஏழைகுடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 கிலோஅரிசியை 2 கிலோவாக அரசு குறைத்துள் ளது. இது நியாயம்தானா?’ என்று கேட்டுள்ளார். அப்போதுதான் அமைச்சர் உமேஷ்கட்டி,‘2 கிலோ அரிசி போதாது என்றால் நீங்கள் சாவது நல்லது. அதற்கு முன்பு அரிசியை விற்பனை செய்யும் தொழிலை நிறுத்த வேண்டும். இனி எனக்கு நீங்கள் போன் செய்யக்கூடாது” என்று திமிராகப் பேசி மிரட்டியுள்ளார்.இந்த தொலைபேசி உரையாடல் பதிவு,சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, கர்நாடக எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், அமைச்சர் உமேஷ் கட்டி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். உமேஷ் கட்டியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே தன்னை தூண்டிவிடும் வகையில் பேசியதாலேயே கோபம் அடைய நேர்ந்ததாக உமேஷ் கட்டி விளக்கம்அளித்துள்ளார். ஒருவர் கூட பசியால் இறக்கக்கூடாது என்பது தனது நிலைப்பாடு எனவும் கூறியுள்ளார். மறுபுறம், அமைச்சர் உமேஷ் கட்டியின் பேச்சுக்காக, மாநில முதல்வர் எடியூரப்பா வருத்தம் தெரிவித்துள்ளார்.