districts

img

நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற என்ற பெயரில் இடிக்கப்பட்ட வீடுகள்; வீதியில் நிற்கும் ஏழை மக்கள் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை ஆறுதல்

அரியலூர், ஏப். 25 - கங்கவடங்க நல்லூர் கிராமத்தில்  ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவ தற்காக இடிக்கப்பட்ட வீடுகளை யும் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பத்தின ரையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை நேரில் பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே கங்கவடங்க நல்லூர் கிராமத்தில் பாண்டியன் எனும் ஏரி உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 82.12.0 ஹெக்டேர் (202 ஏக்கர் 83 சென்ட்) நிலப்பரப்பு கொண் டது. இதனை சுற்றி பலரும் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 50 குடும்பத்தினர், கடந்த 100 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீர்நிலை ஆக்கிர மிப்புகளில் உள்ள 22 வீடுகளை அகற்ற விடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, பொதுப்பணித்துறை மற்றும் வரு வாய்த்துறை, காவல்துறை, தீய ணைப்பு துறை உதவியுடன், கடந்த  ஏப்.21 அன்று வீடுகள் இடித்து  அகற்றப்பட்டன. அப்போது தங்க ளுக்கு இடம் கொடுக்காமலேயே எங்கள் வீட்டை இடிக்க வருகிறீர்களே  என ஏழை மக்கள் அழுது புலம்பி னர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏரி புறம் போக்கு என்று தெரிந்தும் எங்களுக்கு  தொகுப்பு வீடு கொடுத்து யார்? வீடு  கட்ட அனுமதி கொடுத்தது யார்? வீட்டு  வரி ரசீது கொடுத்தது யார்? குடிநீர்  குழாய் இணைப்பு, மின்னிணைப்பு கொடுத்தது யார்? இவை எல்லா வற்றையும் அரசே கொடுத்துவிட்டு தற்போது மாற்று இடம் கொடுக்கா மல் இடிப்பது முறையற்ற செயலா கும் என கூறி, தங்களுடைய ரேசன்  கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர்  அடையாள அட்டை உள்ளிட்டவை களை சாலையில் வீசி தீயிட்டுக் கொளுத்த முயற்சித்தனர்.  

அப்போது அருகில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் அதிகாரிகளிடம் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப் போது அதிகாரிகள் மாற்று இடம் வழங்குவதாக தெரிவித்தனர்.  இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முயற்சியால், வீடு  இழந்தவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் மாற்று இடம் வழங்கப்பட்டது. மேலும் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். புதிதாக வீடு கட்ட நிதி உதவி வழங்க  வேண்டும். சேதமடைந்து, இழந்த பொருட்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்திருந்தது.   இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கந்தர்வக்கோட்டை எம்எல்ஏவும் மாநிலக் குழு உறுப்பினருமான எம்.சின்னதுரை ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) இரவு அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து,  இடிக்கப்பட்ட வீடுகளை பார்வை யிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித் தார். பின்னர் அவர் இதுகுறித்து பேசு கையில், “மாவட்ட ஆட்சியரும் வரு வாய்த் துறையினரும் துரோகம் செய்துள்ளனர். மாற்று இடம் கொடுக் காத பட்சத்தில், அதே இடத்தில் வீட்டை கட்டுவோம்.

நீதிமன்ற உத்த ரவு என்ற பெயரில், தமிழ்நாடு அரசின்  வருவாய்த் துறையும் பல அதிகாரி களும் சேர்ந்து இதுபோன்ற இரக்க மற்ற செயல்களில் ஈடுபடுவதைக் கண்டித்து, மே 6 ஆம் தேதி தமிழ்நாடு  முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்து இருக்கிறோம். இதுகுறித்து உங்க ஊர் சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணனி டம் நான் பேசுகிறேன். நிச்சயமாக உங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  உறுதுணையாக இருக்கும். சட்ட மன்றத்தில் உங்கள் குரலை வலு வாக தெரிவிப்பேன். இது சம்பந்த மாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத் திற்கு கொண்டு செல்வேன்” என்றார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை எம்எல்ஏ சின்னதுரை  வழங்கினார். கட்சியின் ஜெயங்கொண் டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்க டாஜலம், மாவட்ட செயலாளர் இளங் கோவன், கைத்தறி நெசவு தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.என்.துரைராஜ், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.கிருஷ் ணன், துரை.அருணன், ஆண்டி மடம் வட்ட செயலாளர் வி.பரம சிவம், தா.பழுர் ஒன்றிய செயலாளர்  ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்டக் குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.