districts

img

ஆரணி தொகுதி: தரணிவேந்தன் வெற்றி

திருவண்ணாமலை, ஜுன் 5- ஆரணி மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் எம்.எஸ். தரணிவேந்தன் 5 லட்சத்து 99 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார். ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன், திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், பிஎஸ்பி வேட்பாளர் துரை, பாமக வேட்பாளர் கணேஷ்குமார்,  நாம்தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சமி, தாக்கம் வேட்பாளர் சக்திவேல் உள்ளிட்ட19 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டி யிட்டனர்.

மக்களவைத் தேர்தலில், ஆரணி மக்களவைத் தொகுதியில் 75.65 விழுக்காடும் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. ஜுன். 4 அன்று திருவண்ணாமலை செங்கம் சாலை சண்முகா தொழிற்சாலை அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றின் முடிவில், திமுக வேட்பாளர் தரணி வேந்தன், 21,106 வாக்குகளும், அதி முக வேட்பாளர் கஜேந்திரன் 15,196 வாக்குகளும், பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 10,910 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 2961 வாக்குகளும் பெற்றனர்.

திமுக வேட்பாளர் தரணி வேந்தன், 5 ஆவது சுற்று முடிவில் 43,927 வாக்குகள் வித்தியாசத்திலும், 10 ஆவது சுற்று முடிவில், 94,712வாக்குகள் வித்தியாசத்திலும், 15 ஆவது சுற்று முடிவில் 1,44,763 வாக்குகள் வித்தியாசத்திலும், 20 ஆவது சுற்று முடிவில் 1,94,378 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னணியில் இருந்த அவர் இறுதி சுற்று முடிவில் 5,00,099 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 2,91,333 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும்,  பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 2,36,571 வாக்குகள் பெற்ற 3 ஆம் இடத்தையும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 66,740 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தையும் பெற்றனர்.

இதையடுத்து. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி  கே.எஸ். மஸ்தான், தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே கம்பன் உள்ளிட்டோர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர்.  இவர்கள் முன்னிலையில் திமுக வேட்பாளர் எம்.எஸ்தரணிவேந்தனிடம் வெற்றிச் சான்றிதழை  ஆரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு.பிரிதர்ஷினி வழங்கினார்.

;