districts

img

முட்புதர்கள் மண்டிக் கிடக்கும் மாவடிகுளத்தை தூர்வார வேண்டும்

திருச்சிராப்பள்ளி, செப்.7 - திருச்சி மாவட்டம் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 147 ஏக்கர் பரப்பளவு கொண்ட  மாவடிகுளம் (மாவட்ட வடிகால் குளம்) பொன்னேரிபுரம், கீழக்குறிச்சி பிரதான சாலையில் அமைந்துள்ளது.  இக்குளம் அந்தப் பகுதியில் உள்ள கீழகல்கண்டார் கோட்டை, நத்தமாடிப் பட்டி,  கீழக்குறிச்சி, பொன்னேரிபுரம், அடைக்கல அன்னை நகர், தென்றல் நகர், அமுல்நகர், திருநகர் பகுதிகளின் நீர் ஆதாரமாக உள்ளது. இந்தக் குளம் தற்போது முட்புதர் களால் மண்டி கிடப்பதை போர்க்கால அடிப் படையில் தூர்வார வேண்டும். செம்பட்டு பகுதியில் இருந்து வரத்து வாய்க்கால் வழி யாக மாவடி குளத்திற்கு தண்ணீர் வருகிற பாதையை தூர்வார வேண்டும். பழுதடைந்த  இரண்டு குழுமிகளை சரி செய்ய வேண்டும்.  500 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய  நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள மாவடி குளத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  பொன்மலை, நத்தமாடிபட்டி கிளைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளியன்று பொன்னேரிபுரம் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர்  சங்க பகுதி செயலாளர் கோபி தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன்,  மாவட்டத் தலைவர் கே.சி.பாண்டியன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் மோகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிமாறன், மாவட்டக் குழு உறுப்பினர் மகேந்திரன், டி.ஆர்.இ.யு கோட்டத்  தலைவர் லெனின் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.