பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருட்கள் விற்ற 4 பேர் மீது வழக்கு
அரியலூர், செப்.7 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் ஜெயங் கொண்டம் சுற்று வட்டாரப் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பெட்டிக்கடை, மளிகை கடை களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரியவளையம் மேலத்தெருவைச் சேர்ந்த ராஜாசிதம்பரம் என்பவரது பெட்டிக்கடையில் 3 பாக்கெட் விமல் பாக்குகளும், 3 சுல்தான் புகையிலை பாக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இதேபோல் கடாரங்கொண்டான் கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்த பாலகுரு என்பவரது பெட்டிக் கடையில் 15 ஹான்ஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உட்கோட்டை கிராமம் வடக்கு புதுத் தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவரது மளிகை கடையில் 8 ஹான்ஸ் பாக்கெட் டுகளும், 3 சுல்தான் புகையிலை பாக்கெட்டுகளும் பறி முதல் செய்யப்பட்டன. உட்கோட்டை கிராமம் நடுத்தெரு வைச் சேர்ந்த காமராஜ் என்பவரது பெட்டிக் கடையில் 5 ஹான்ஸ் பாக்கெட்டுகள் உள்ளிட்ட புகையிலைப் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் ராஜா, பாலகுரு, சங்கர், காமராஜ் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
டேராடூன் ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
தஞ்சாவூர், செப்.7 - டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூ ரியில் ஜூலை 2025 ஆம் பருவத்தில் VIII ஆம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்) சேர்வ தற்கான தேர்வு 01.12.2024 இல் நடைபெறவுள்ளது. அதன் விபரங்கள் அடங்கிய முழு தொகுப்பு www. rimc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மேற்காணும் இணையதள முகவரியில் விண்ணப் பங்களை பதிவிறக்கம் செய்து 30.09.2024 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். 01.07.2025 அன்று 11.5 வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். அதாவது 02.07.2012-க்கு முன்னதாகவும், 01.01.2014-க்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. இந்த வயது வரம்பில் எந்த தளர்வும் கிடையாது. ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவ ராக உள்ள அனைத்து சிறார்களும் இத்தேர்விற்கு விண்ணப் பிக்கலாம். எனவே, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் சிறார்களை இக்கல்லூரியில் சேர்த்து பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.
பெட்ரோல் பங்க்கில் தகராறு கல்லூரி மாணவர் உட்பட இருவருக்கு அரிவாள் வெட்டு
தஞ்சாவூர், செப்.7 - தஞ்சாவூர், ஆற்றுப்பாலம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. அதில் சனிக்கிழமை காலை பாலசுப்பிரமணியம் (50), என்பவர் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளார். அவர் வரிசையில் நிற்காமல் இருந்தாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு பணிபுரியும் பெண் ஊழியரான ஜெய ராணி வரிசையில் நிற்க கூறியுள்ளார். இதில், பாலசுப்ர மணியனுக்கும், ஜெயராணிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஜெயராணி தனது கணவர் அலெ க்ஸ்க்கு மொபைலில் பேசி, தன்னிடம் ஒருவர் தகராறு செய்வதாகக் கூறி வரவழைத்துள்ளார். உடனே பால சுப்பிரமணியம் தனது மகன் சட்டக் கல்லூரி மாணவ ரான ஹரிஹரனுக்கு (24) போன் செய்து அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த இருதரப்பும் பேசிக் கொண்டி ருக்கும் போது, ஹரிஹரன் அந்த பெண் ஊழியரின் கணவரை தாக்கியுள்ளார். இதனால் அலெக்ஸ், தான் மறைத்து வைத்திருந்த அரி வாளை எடுத்து ஹரிஹரன் மற்றும் அவரது அத்தை மகன் கார்த்திக் (25) ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ஹரிஹரனுக்கு முதுகில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, ஜெயராணியின் கண வர் மற்றும் அவருடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட வர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயமடைந்த ஹரிஹரன் மற்றும் கார்த்திக் சிகிச்சைக் காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல்துறையினர் வழக்குப் பதிந்து, தப்பியோடி யவர்களை தேடி வருகின்றனர். நகரத்தின் மையப் பகுதியில், பட்டப் பகலில் இளை ஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவலர்களுக்கான கலவர தடுப்பு ஒத்திகைப் பயிற்சி
நாகர்கோவில், செப்.7- கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சுந்தரவதனம் உத்தரவுப்படி செப்டம்பர் 6-ம் தேதி கன்னி யாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் களுக்கு கலவர தடுப்பு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. இதில் சட்ட விரோதமாக கூடும் கலவர கூட்டத்தை எவ்வாறு முறையாக கலைந்து போக செய்வது என்று செய்முறை ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி யின் போது காவலர்களுக்கு ஹெல்மெட் உள்ளிட்ட பாது காப்பு உபகரணங்களுடன் லத்தி, கண்ணீர் புகை குண்டு கள் , துப்பாக்கியை முறையாக பயன்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஒத்திகைப் பயிற்சியின் போது வருண், வஜ்ரா வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
சாகுபடி பணிகள் துவங்குவதற்கு கூட்டுறவு கடன், விதை உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும்
சிபிஎம் வலியுறுத்தல் மன்னார்குடி, செப்.7- இவ்வாண்டு விவசாயப் பணிகள் தாமதமின்றி துவங்குவதற்குத் தேவை யான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்கள் மற்றும் கூட்டுறவு கடன் தட்டுப்பாடின்றி கிடைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வாரூர் மாவட்டக் குழு தமி ழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலி யுறுத்தியுள்ளது. கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பில் மன்னார்குடியில் சனிக் கிழமை டி. வீரபாண்டியன் தலைமையில் கூட்டம் நடை பெற்றது. இதில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் குறித்து கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி செய்தியா ளர்களிடம் தெரிவித்ததாவது: திருவாரூர் மாவட்டத் தில் நடப்பு 2024-25 ஆம் ஆண்டில் சம்பா நேரடி நெல் விதைப்பு, குறுவை சம்பா மற்றும் தாளடி பருவ சாகு படியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மொத்த சாகுபடி நடைபெறும் நிலை உள்ளது. இந்நிலையில் இச்சாகுபடி பணிகள் தாமத மின்றி துவங்குவதற்குத் தேவையான விதை நெல், உரம் போன்ற வேளாண் இடு பொருட்கள் தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு மாவட்டம் முழுவதும் கிடைக்க வேண்டும். அதாவது தேவையான விதை உரம் போன்ற வேளாண் இடுபொருட்கள் மற்றும் தேவையான கூட்டு றவு கடன், விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் துரித நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என கட்சியின் மாவட்டக் குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரி வித்தார்.
தண்டவாள பராமரிப்புப் பணிகள் நெல்லை-திருச்செந்தூர் பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து
திருநெல்வேலி ,செப்.7- தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் 25 தினங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை பிட்லைன்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் 25 நாட்கள் நடைபெற உள்ளது. இதையடுத்து திருச்செந்தூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு. நெல்லைக்கு வரும் பய ணிகள் ரயில் (எண்.06674), நெல்லையில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரயில் (எண்.06409) ஆகிய இருரயில்களும் வரும் 9ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை தெற்கு ரயில்வே தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
நெல்லை – தூத்துக்குடி பயணிகள் ரயில் செப். 9 முதல் மீண்டும் இயக்கம்
திருநெல்வேலி ,செப்.7- நெல்லை தூத்துக்குடி பயணிகள் ரயில் அடுத்த 6 மாதங்களுக்கு இயக்கப் படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலக்காட்டில் இருந்து திருநெல் வேலி வரை தினசரி இயக்கப்பட்டு வரும் பாலருவி விரை வு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட் டுள்ளதால்,கடந்த ஆக.19-ஆம் தேதி முதல் திருநெல்வேலி-தூத் துக்குடி பயணிகள் ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது.இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் பாதிக்கப்படு வதாகவும், ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் ரயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், திருநெல்வேலி தூத்துக்குடி பயணிகள் ரயில் மீண்டும் அடுத்த 6 மாதங்களுக்கு (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) இயக் கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில், திருநெல்வேலி - தூத் துக்குடி பயணிகள் விரைவு ரயிலை சோதனை அடிப்படையில் செப்.9- ஆம் தேதி முதல் அடுத்த 6 மாதங் களுக்கு இயக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்கள் அழிப்பு உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை
நாகர்கோவில். செப்.7- நாகர்கோவிலில் விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்களை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை யினர் கைப்பற்றி அழித்த னர். நாகர்கோவிலில் அழகப் பபுரம், கட்டையன்விளை, வடசேரி காலை மற்றும் மாலையில் கடல் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் அழுகிய மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனாவிற்கு தகவல் வந்துள்ளது. அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினருக்கு மீன்கள் விற்பனை செய்யும் இடத் திற்கு சென்று மீன்களை ஆய்வு செய்ய உத்தர விட்டார். அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை யினர் மீன் விற்பனை செய்யும் இடத்தினை ஆய்வு செய்து அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன் களை பரிசோதனை செய்த னர். அதில் அழுகிய மீன்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனடியாக அந்த மீன்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு துறையி னர் மீன் விற்பனை செய்ப வர்களை எச்சரித்து மீன்களை அழித்தனர். இதில் வடசேரியில் உள்ள மீன் சந்தையில் சுமார் 210 கிலோ அழிக்கப்பட்டன.