அரசரும், அரசியும் உணவருந்திக் கொண்டி
ருக்கிறார்கள்...
தான் சாப்பிட்ட வாழைப்பழங்களின் தோல்களை அரசியின் பக்கம் தள்ளுகிறார். அப்போது அமைச்சர் உள்ளே நுழைகிறார்.
“இவ்வளவு பழங்களை அரசி சாப்பிட்டுள்ளார். இப்படி சாப்பிட்டால் என்ன ஆவது” என்கிறார் அரசர் அமைச்சரிடம்.
முகத்தில் எந்தவித மாற்றத்தையும் அரசி காட்ட
வில்லை.
“நானாவது பரவாயில்லை. உங்கள் அரசர் தோல்களையும் சேர்த்து சாப்பிட்டு விட்டாரே.. என்ன ஆவது..?”
இப்படி நிலைமையை சமாளிக்கத் தெரிந்தவர்தான் பணிகளுக்குத் தேவைப்படுகிறார்கள். அதனால்தான் கணிதம், காரணம் அறிதல், பொது அறிவு, மொழி யறிவு என்று வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. அரசு எந்திரத்தின் அங்கமாக இருப்பவர்களில் பெரும் பாலானவர்கள் அன்றாடம் பிரச்சனைகளைச் சந்திக்கி றார்கள். வங்கிகளில் மதிய உணவு நேரத்தின்போது, உணவு இடைவேளை என்று எழுதி வைப்பதே பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது. உணவு நேரத்தின்போது சாப்பிடச் சென்று விடுகிறார்கள் என்ற கூசாமல் பேசுகி றார்கள். பணமதிப்பிழப்பின்போது அரசாங்கத்திற்கு பெரும் கெட்ட பெயர் வராமல் காப்பாற்றியதே வங்கி ஊழி யர்கள்தான் என்பது அந்த நேரத்தில் வங்கிகளில் கால் கடுக்க நின்றவர்களுக்கு நன்றாகவே தெரியும். தேர்வில் மிகவும் சிக்கலான வினாக்களை எதிர்கொண்டு பணியில் சேரும் ஊழியர்கள், அதைத் தங்கள் பணியில் இணைத் தால் பெரும் வெற்றியைப் பெறுவார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கும், தேர்வர்களுக்கும் எப்போது நேரம் முடியும் என்று காத்திருப்பதே வழக்கமாகி விட்டது. மணியடிக்கையில், அடடே ஏன்தான் இந்த மணி யடித்ததோ என்று அவர்கள் நினைக்கும் வகையில் பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள் இருக்கவே செய்கி றார்கள். பயிலும் பாடங்களை எப்படிப் பின்னாட்களில் இணைப்பது என்பதையும் சொல்லிக் கொடுக்கவே செய்கிறார்கள். டூயட் பாடியதால் தோல்வி..!! ஒரு பயிற்சி மையத்தில் வரலாறு பாட ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தபோது நாலைந்து தேர்வர்கள் கூட்டமாக நின்று மொபைலைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன என்று கேட்டபோது, சிரித்துக் கொண்டே உட்கார்ந்தனர். ஒருவர் மட்டும் டூயட் பாட்டு சார்... என்று சொன்னார். தேர்வு முக்கியம், மக்களே...ஒரு அரசர் டூயட்ல கவனம் செலுத்தி, ஆட்சியே போச்சு என்று ஆசிரியர் சொன்னவுடன் அனைவரின் கவனமும் அவரை நோக்கித் திரும்பியது. வழக்கமாக, ஆசிரியர் என்ன வேண்டு மானாலும் நடத்திக் கொள்ளட்டும் என்று வகுப்ப றைக்குள்ளும் யூடியூபைப் பார்த்துக் கொண்டிருப்ப வர்கள் இருப்பார்கள். அவர்களும் காதைத் தீட்டினர். சார்... யார் சார் அந்த அரசர்..? அவரோட பெயர் பிரித்விராஜ் சவுகான்.. ஓ... தரெய்ன் போர்ல சண்டை போட்டவர்தானே... ஆமா... எங்க ஒவ்வொருத்தரா அவரப் பத்தி தெரிஞ்ச ஒரு விஷயத்தச் சொல்லுங்க பாக்கலாம்.. முதல் தரெய்ன் போர் 1191... பிரித்விராஜ் ஜெயிச் சாரு... 1191ல இரண்டாவது தரெய்ன்... கோரி ஜெயிச் சாரு.. ஜெயச்சந்திரன் இரண்டாவது போர்ல உதவு னாரு..
சூப்பர்...
அதுசரி சார்... இவருதான் டூயட் பாடுனாரா..?
ஆமா... மூணு டூயட்...
அதெப்புடி சார் சொல்றீங்க..?
இந்தக்கதைய வெச்சு ராணி சம்யுக்தானு ஒரு படமே வந்துச்சு... அதுலதான் மூணு டூயட்..
யார் நடிச்சது சார்..?
அதற்குள், சார்... ஓஹோ வெண்ணிலா.. ஓ வெண்ணிலா பாட்டு கூட வருமே... அந்தப் படம்தான.. எம்.ஜி.ஆரும், பத்மினியும் பாடுவாங்களே..
பரவாயில்லையே... பழைய படம்லாம் நினைவுல இருக்கே..
பக்கத்தில் இருந்த மற்றொரு தேர்வர், சார்... யூடியுப்ல
தேடித்தான் சொல்றாப்ல..
அனைவரும் சிரித்தனர்.
சம்யுக்தா பிரித்விராஜ விரும்புவார்... தந்தை ஜெயச்சந்திரனோ அத ஏத்துக்காம சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்வார்.. பிரித்விராஜ அவமானப்படுத்த சுயம்வரம் நடக்குற இடத்து வாசல்ல அவர மாதிரி ஒரு
சிலைய வெச்சாரு.. சம்யுக்தையோ அந்த சிலைக்கு மாலை போட்டுருவார்... சிலைக்குப் பின்னாடி மறைஞ்சு
ருந்த பிரித்விராஜ் அவரக் குதிரைல தூக்கி வெச்சுக் கிட்டு போயிருவாரு.. அப்புறம்தான் கோபமான ஜெயச்சந்தி
ரன் கோரி முகமதுக்கு உதவுவார்..
சார்... இது படத்துலயா...
இல்ல.. நிஜத்துலயும்தான்...
காதல் மகத்தானது சார்.. என்று சொல்லிவிட்டு, ஆசிரியரின் முகத்தில் வடிந்த கிண்டலைப் புரியாமல் முழித்தார்..
பிரித்விராஜ்க்கு சம்யுக்தை மூணாவது துணைவியார்...
படத்துலயுமா சார்..?
குறுக்கே புகுந்த மற்றொரு தேர்வர், படத்துல எப்புடி வைக்க முடியும்.. எம்.ஜி.ஆர். படமாச்சே... மக்கள் ரசிக்க மாட்டாங்க.. படம் ஓடாது..
இப்படி சுவாரஸ்யமாக வகுப்புகள் நடப்பதும் உண்டு. சில சமயங்களில் தேர்வர்களில் ஒன்றிரண்டு பேர், சார்... இந்நேரம் ஒரு 25 வினாக்களச் சொல்லி, அதுக்கான விடைகளையும் தந்துருக்கலாமே என்பார்கள். ஆனால் இந்த மாதிரியான வகுப்புகள் பாடங்களை நினைவில் நிற்கச் செய்பவையாக மாறியிருக்கின்றன.
சில ஆசிரியர்கள், இந்த இடத்திலிருந்து பின்னோக்
கிச் செல்வார்கள்...சிலர் முன்னோக்கிச் செல்வார்கள். இந்த ஆசிரியர் கஜினி முகமது, 711ல் முகமது பின் காசிம்,
கி.மு. 326ல் அலெக்சாண்டர்... கி.மு. 1500ல ஆரியர் படையெடுப்பு.. அப்புறம், அதற்கு முன்பு.. என்று நகர்வார்கள்... அதெல்லாம் பரமசிவன், பார்வதி, விஷ்ணு, அல்லா மற்றும் ஏசு ஆகியோர் இல்லாத காலம் என்று அவர் சொல்கையில் ரசிப்பார்கள்.
வகுப்பறைகளில் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். சிலர் வெறும் வினாக்களுக்கு, விடைகளைப் போட்டுத் தங்களை சோதித்துக் கொள்ளும் நிலைமையில் இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மனப்பாடம் செய்தால் போதும். இந்த உத்தி சிலருக்கு உதவவே செய்யும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு சுவாரஸ்யமாகப் படித்தால் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால் இந்த
உத்தியைக் கடைப்பிடிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
சார்... உங்கள மாதிரி மத்தவங்க எடுக்க மாட்டேங்குறாங்க என்று குரல் எழுப்புவார்கள்.
நீங்க எல்லாரும் ஒரே மாதிரியா படிக்குறீங்க என்று
பதில் போட்ட ஆசிரியர், ஆனா, உங்களுக்கு ஒண்ணு
தெரியுமா.. என்று நிறுத்தினார்..
என்ன சார்..
உங்களுக்கு அறிவியலும் நான்தான் எடுக்கப் போறேன்..
அப்போ அதுலயும் எங்களுக்கு கதை உண்டா..?
மற்றொரு தேர்வர், சார்.. கிரிக்கெட்ட வெச்சு ஒரு சார், இயக்கம் பாடம் எடுத்தாரு...
சரி... அடுத்த வகுப்புல நாம எல்லாம் சேந்து சாப்புடலாம்..
சாப்புடுறதா... என்ன சாப்புடப் போறோம், சார்..
ஆக்சாலிக் ஆசிட் சாதம் உரத்த குரலில் ஒரு தேர்வர்.
ரத்த சோகைக்கு உணவே மருந்து... மற்றொருவர்.
தோசை, சப்பாத்தி... குரல்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன.
ஆசிரியரின் முகத்தில் இருந்த புன்முறுவல் மாறவேயில்லை.
அப்போ நம்முறைய முயற்சியெல்லாம் வீண்தானோ
என்ற முடிவுக்கு வந்த தேர்வர்கள் அமைதியாகினர்.
சார்.. நீங்களே சொல்லுங்க..
அணுவைச் சாப்பிடப் போறோம்..
பிளந்தா சார்... பிளக்க முடியாதே... அதனாலதான அது அணு..
வகுப்புல பார்ப்போமே என்றவாறு நகர்ந்தார்.