districts

img

ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் 6 முறை இருதய அறுவை சிகிச்சை செய்த சிறுவன் துவாரக் தங்கம் வென்று சாதனை

சென்னை, செப். 7- சென்னையில் மாநில அளவில்  நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் சென்னையைச் சேர்ந்த சகோதரர்கள் துவாரக், ஹரி தங்கம் வென்றனர். சென்னை மாவட்ட ஜிம்னாஸ்டிக்  சங்கத்தின் சார்பில், 16ம் ஆண்டு  மாநில அளவிலான தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் - 2024 போட்டி, வேளச்சேரி யில் நீச்சல் குள வளாகத்தில் கடந்த  31ஆம் தொடங்கி 1ம் தேதி வரை 2 நாட்கள் நடந்தது. பல்வேறு மாவட்டங்க ளில் இருந்து 6 வயது முதல் 17 வயது நிறைந்த பள்ளி மாணவர்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 12, 14, 17 வயதுக்குட்பட்ட 3 பிரிவுகளில் நடந்தன.  2 நாட்கள் நடந்த போட்டிகளின்  முடிவில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி மொத்தம், 20 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தர்மபுரி மாவட்ட அணி, 10 தங்கம்,  7 வெள்ளி, 3 வெண்கலம் வென்று, 2வது இடமும், தஞ்சாவூர் அணி 5 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கலம் வென்று, 3வது இடத்தையும் பிடித்தன. இந்த ஜிம்னாஸ்டிக் போட்­டியில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் கே. துவாரக்  லெவல் 4 ல்தங்கப் பதக்கம் வென்றார். 8 வயது சிறுவன் கே. ஹரி 2வது லெவல் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தங்கம் வென்றார் . துவாரக் இதற்கு முன்பு 3 முறையும், ஹரி 2 முறையும் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளனர். 10 வயது துவாரக்கிற்கு 6  முறை இருதய அறுவை சிகிச்சை  நடந் துள்ளது. இருந்தும் அது பற்றி எந்தவித அச்சமும் இன்றி போட்டி யில் பங்கேற்று தங்கம் வென்று சாதனை படத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.