அது காசாவாக இருந்தாலும், மணிப்பூராக இருந்தாலும் மோதல் பகுதிகளில் கலைஞர்கள் ஓய்ந்து போக மறுக்கிறார்கள். அவர்கள் தமது அச்சம், கோபம், விரக்தி ஆகியவற்றை எதிர்ப்பின் வடிவமாக வெளிப்படுத்துகிறார்கள். ஓவியர் மைசரா பரூட் காசா நகரத்தில் தனது சிறிய குடும்பத்துடன் ஒரு பெரிய குடும்ப வீட்டில் வசித்து வந்தார். ஒவ்வொரு நாள் காலையும் அவர் நுண்கலைப் பிரிவில் விரிவுரையாளராக இருந்த அல் அக்சா பல்கலைக்கழகத்துக்குச் செல்வார். அவர் வீடு திரும்பியதும் மாலை வேளையை தனது ஸ்டூடியோவில் புத்தகங்கள், பத்திரிகைகள், வண்ணங்கள், கேன்வாஸ், பரிசோதனைகளின் நற்துணையுடன் கழிப்பார். இது 2023, அக்டோபர் 8 வரை.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு அவரது தனி அலுவலகம் 12 மாடி அல் வதன் கோபுரம் தரை மட்டமானதில் அழிக்கப்பட்டது. அடுத்த நாள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது வீடு தரைமட்டமானது.
ன் அனைத்தையும் இழந்தேன்: எனது படைப்புகளில் பெரும்பகுதி, கலை ஞர்களான என் நண்பர்களிடமிருந்து பெற்ற கலை வடிவங்கள், எனது அனைத்துப் பரி சோதனைகளையும் கொண்ட எனது ஸ்டூடியோ, சேமிப்புகள், கடந்த 30 ஆண்டு களாகச் சேர்த்து வைத்த அனைத்துப் படைப்புகளும் அழிந்து போயின. எனது கருவிகள், டஜன் கணக்கான எனது ஓவி யங்கள், ஆயிரக்கணக்கான கோட்டோவி யங்கள், 3000 புத்தகங்களுக்கும் அதிக மாகக் கொண்ட நூலகம் அனைத்தும் பறி போய்விட்டன. அனைத்து நினைவுகளை யும், சொத்துகளையும் கொண்ட எனது சிறிய தனி உலகத்தை” நான் இழந்து விட்டேன். என்னால் எதையும் காப்பாற்ற முடிய வில்லை” என்கிறார் பரௌட். அவர் அறிந்த வாழ்க்கை மாறிவிட்டது, அநேகமாக நிரந்தர மாக மாறிவிட்டது. விரைவில் தான் உயிருடன்தான் இருக்கி றேன் என்று தனது மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும் அறிவிக்கும் விதமாக, அவர் மையால் வரைந்த ஓவியங்களை தின மும் சமூக ஊடகத்தில் வெளியிடத் தொடங்கி னார். “ராக்கெட்டுகளும், குண்டுகளும் அழிவு இயந்திரங்களும் எனது அனைத்து எதிர்காலத்தையும் அழித்து விட்ட போதி லும், அவர்களால் ஓவியக்கலையின் மீதான எனது காதலையும், அன்பையும் எடுத்துச் செல்ல முடியவில்லை” என்று அவர் அழுத்த மாகக் கூறுகிறார்.
’இன்னும் உயிருடன்’ என்று சரியான வகை தலைப்பிலான இந்தச் சேகரிப்பு இன்றும் தொடர்ந்து செயல்படுகிறது. பரௌட் நிவாரண முகாம் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு ஓடிக் கொண்டே இருந்தாலும் கூட அவரது ஓவியங்கள் போரால் நொறுக்கப்பட்ட காசாவை, அதன் தினசரி வாழ்க்கையை, கூர்மையான, நேர டியான கோட்டோவியங்களால் சித்த ரிக்கின்றன. இதை எழுதிக் கொண்டி ருக்கும் சமயத்தில், பரௌட் டெயிர் அல் பலாவுக்கு இடம் பெயர்க்கப்பட்டுள்ளார். அநேகமாக எந்தச் சுவரும் இல்லாத நொறுங்கிய ஒரு கட்டிடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பரௌட் மோதல்களை சந்திக்கும் நேரத்திலேயே, தணிக்கை, வாழ்க்கை மீதான உண்மையான மிரட்டல்களைக் கடந்து துணிவுடன் தொடர்ந்து கலையை உருவாக்கும் பல படைப்பாளிகளில் ஒருவர். மோதல்களில் உருவாகும் கலை தவிர்க்க முடியாமல் பல அர்த்தங்களையும், நோக்கங்களையும் எடுத்துக் கொள்கிறது; பெரும்பாலான நேரங்களில் அடிக்கடி எதிர்ப்பின் வலிமையான கருவியாக, விழிப்புணர்வாக, ஆவணப்படுத்தலாக, சுய வெளிப்பாடாக வடிவம் எடுக்கிறது. மிகச் சமீபத்தில் அவரது படைப்புகள் நியூ யார்க்கின் நவீனக் கலை அருங்காட்சி யகத்தின் சுவர்களில், வெனிஸ் பியனல்லில் (அமெரிக்காவின் பாலஸ்தீன அருங்காட்சி யகத்தின் ஒத்துழைப்புடன்), வெனிஸின் பிளாசா மோராவில் ‘தமது சொந்த நிலத்தில் அன்னியர்கள்’ என்ற தலைப்பில் காட்சிப் படுத்தப்பட்டன.
ஒரு மோதலின் பாடல்கள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மணிப்பூரில் இசைக்கலைஞர் அகு சிங்கங் பாம், இம்பால் மேற்கிலுள்ள பாயெங்கில் இருக் கும் ஒரு நிவாரண முகாமில் ஒரு தற்காலிக ஸ்டூடியோவை பல்வேறு இனக்குழுக்களை யும், சமூகங்களையும், மதங்களையும் சேர்ந்த குழந்தைகளைக் கொண்டு உருவாக்கினார். அவர்கள் ஒரே குரலில் பாடினார்கள்: என் கனவு களில் நான் அடிக்கடி செல்கிறேன்/ மலைப்பகுதி யிலுள்ள என் சிறு குடிசைக்கு/ அது சாம்பலாகி விட்ட போதிலும்/ மலைப்பகுதியிலுள்ள என் சிறு கிராமத்துக்கு. மே 3ஆம் தேதி அந்த மாநிலத்தில் மோதல் தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டது. ‘சிங்யாகி கான்போக்ஷாங்’ என்ற தலைப்பிலான இந்தப் பாடல் (ஒரு நிவாரண முகாமிலிருந்து வரும் பாடல்) முன்பு இருந்த வாழ்க்கையின் ஒரு துய ரமான நினைவு, நம்பிக்கை என்ற தெளிவான செய்தியைக் கொண்டது
”நெருக்கடிக்கு முன்பு மணிப்பூர் மிகவும் துடிப்புடன் இருந்தது. பெருந்தொற்றுக்குப் பிறகு சகிக்கக்கூடிய ஒரு நம்பிக்கை உணர்வு குறிப்பாக இளைஞர்களிடம் பல இசை விழாக் களுடன் இருந்தது. கடந்த 17 மாதங்கள் எந்த செயல்பாட்டின் மீதும் ஒரு முழுமையான நிறுத்தத்தைக் கொண்டு வந்து விட்டது” என்கி றார் சிங்கங்பம். அவர் இம்பால் டாக்கீஸ் என்ற ராக் இசைக்குழுவின் முன்னணிப் பாடகர். அவர் அமைதித் திட்டம் (2015இல் தொடங் கப்பட்டது) என்ற உள்ளூர் மொழியின் ஆவணத் திட்டத்துக்கும் தலைமை வகிக்கிறார். அது பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த குழந்தை களின் இசைப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்து வதுடன், நிவாரண முகாம்களில் இருக்கும் குழந்தைகள் அவர்களது பொதுத்தேர்வில் கலந்து கொள்வதற்கு உதவுகிறது. ”இங்கு (ஸ்டூடியோவில்) பல்வேறு பின்னணிகளைக் கொண்ட குழந்தைகள் தம்மிடம் இருக்கும் சிறி யதையும் பகிர்ந்து கொண்டனர். இது மணிப்பூ ரின் மாதிரியாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா? இங்கு ஒரு உயிரோட்டமான கலாச்சாரப் பரிமாற்றம் இருந்தது. ஒரு குக்கி இனச்சிறுமி ஒரு நாகா பாடலைப் பாடுவதைப் பார்க்கலாம் அல்லது ஒரு நாகா இனக்குழந்தை மெய்தி பாடலைக் கற்றுக் கொடுப்பதைக் காண லாம். அதுதான் எங்களுக்குத் தேவையானது!” அந்தப் பாடல் யூ ட்யூபில் சுமார் 75,000 பேர் பேரை ஈர்த்துள்ளது. தனது சொந்த இசைக் கச்சேரி குறித்துப் பேசுகையில் அந்த இசைக்கலைஞர் விரக்தி யாகப் பேசுகிறார். “எங்களில் யாரும் இசைக் கவோ, இசையமைக்கும் மனநிலையிலோ இல்லை. சில இசைக்கலைஞர்கள் பணத்துக் காகத் தமது இசைக்கருவிகளையே விற்கும் நிலைக்குக் கூடத் தள்ளப்பட்டனர்.” நண்பர் களும், சக இசைக்கலைஞர்களும் கல வரத்தைத் தொடர்ந்து வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்த பொழுது, வேகமாக உடைந்து நொறுங்கும் கிக் பொருளாதாரம் ஆகிய வற்றின் போது சிங்கங்பாம் தான் இருக்க வேண்டிய தேவையை உணர்ந்தார். அவரால் தனது பல்வேறு சமூகத் திட்டங்களைக் கைவிட முடியவில்லை. ஆனால் தில்லி, மும்பை போன்ற நகரங்களில் இருக்கும் கலைஞர்களான நண் பர்களின் கிக் அழைப்புகள் அவருக்கு இந்தப் பாடல்களையும், கதைகளையும் மாநிலத்தைத் தாண்டி எடுத்துச் செல்ல உதவுவதில் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.
சமோசா பாக்கெட்டுகள் வழியாக எதிர்ப்பு
அமெரிக்காவில் குடியிருக்கும் வங்கதேச கலைஞர் சோபியா கரீமின் எதிர்ப்புக் கலை குறித்த யோசனை தனிப்பட்ட கதைகள் வழியாக எழுந்ததாகும்: “எனது மாமா (புகழ்பெற்ற புகைப் பட நிருபரும் செயல்பாட்டாளருமான ஷாஹி துல் ஆலம்) 2013இல் சிறையில் அடைக்கப் பட்டார். அதுதான் எனக்குத் திருப்புமுனை” என்கிறார் அவர். வங்கதேசத்தின் தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சட்டத்திற்கெதிராக “தூண்டி விடும்” அறிக்கைகளைக் கொடுத்த தாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது. சமீபத்தில் வங்கதேசத்தின் நீண்ட நாள் பிரதமரான ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்கள் குறித்த செய்தி சேகரிப்பிலும் அவர் முன்னணியில் இருந்தார். ”நான் அவருக்காகப் பிரச்சாரம் செய்த போது அவரது உலகமாக இருந்த இந்தக் கலை ஞர்கள், செயல்பாட்டாளர் சமூகத்துடனும் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. நான் அவர்களு டன் தொடர்பு கொண்டவுடனேயே, வேகம் அதி கரித்தது. நான் கடந்த முப்பது ஆண்டு களுக்கும் மேலாக இனெவெறி எதிர்ப்பு, ஏகாதி பத்திய எதிர்ப்பு இயக்கங்கள், பயங்கர வாதத்துக்கு எதிரான போர், இஸ்லாமிய வெறுப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி செயல்பட்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு மைப்பாட்டுக் குழுக்களுடன் பணிபுரியத் தொடங்கினேன். அப்போதுதான் அவர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளை செயல்படுத்தி, குரல் கொடுக்க கலையும் ஒரு வழி என்பதை உணர்ந்தேன்.”
கரீமின் டர்பைன் பாக் திட்டம் உலகில் பெண் களால் தலைமை தாங்கப்படும் மிகப்பெரும் எதிர்ப்பு இயக்கங்களில் ஒன்று. 2019-20களில் தில்லியில் ஷாஹின்பாக் எதிர்ப்பு இந்தியா விலும், வங்கதேசத்திலும் பொதுமக்கள் சிறைப்படுத்தப்பட்டதன் மீது உடனடியாக கவனத்தைக் கோரியது. கரீமின் டர்பைன் பாக் இயக்கம் அதற்கடுத்த இடத்தைப் பெறுகிறது. எளிமையான சமோசா பாக்கெட்டுகள் எல்லை களைத் தாண்டி எதிர்ப்புச் செய்தியையும், ’ஷாஹிதுல்லை விடுவிக்கவும்’ என்ற கோஷத்தையும் கடத்திச் செல்லும் வழியானது. இந்த இயக்கம் டேட் மாடெர்ன் டர்பைன் ஹாலில் எதிர்ப்பியக்கத்தில் நேரடியாகக் கலந்து கொள்ளும் வடிவத்தையும் எடுத்தது. இன்று அவர் பிரிட்டனில் சிறு சிறு வீடுகள், பகுதிகளை மறுவடிவமைப்பு செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை பாலஸ்தீன இலட்சி யத்துக்கு நிதியாகத் திரட்டுகிறார். “நாங்கள் 11க்கு மேற்பட்ட திட்டங்களை மேற்கொண்டுள் ளோம். இப்போது சில மாணவர்கள் அதில் பங்கெடுத்துள்ளனர். இது எங்கள் வடிவ மைப்பு, அது அப்படித்தான் இருக்கும். ஆனால் பெரும்பாலான கலைஞர்களும், செயல்பாட்டா ளர்களும் அதன் இன்னொரு பக்கத்தில் உள்ள னர். அங்கு அவர்களது பணி மிகவும் அமைதி யாகவும், உள்ளார்ந்தும் இருக்கும்” என்கி றார்.
வாழ்ந்து விட்ட நிதர்சனங்களின் காப்பகங்கள்
கலைகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆதரவு கள் ஏற்கனவே விரக்தியடைந்து விட்டன. இந்தப் பிரச்சனை மோதல்கள் நடக்கும் இடங்களில் இன்னும் மோசமாக உள்ளது என ஆவணப்பட இயக்குநரும் எழுத்தாளருமான காஷ்மீரைச் சேர்ந்த சஞ்சய் காக் கூறுகிறார். “நாம் அனை வரும் இந்தப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் புதிய முயற்சி கள், உருவாக்கங்களின் பங்கை வகிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். சுவரில் உள்ள கீறலைக் கண்டுபிடிக்கவும், ஆயுதத்தில் உள்ள சத்தத்தையும் கண்டு பிடிக்கவும் வேண்டும். உரையாடல்களை நிகழ்த்த வேண்டும், பழைய சிந்தனைகளை புதியவற்றுடன் தொடர்பு படுத்தும் வழிகளையும், புதியவற்றை சிந்திக்க வும் வேண்டும்” என்கிறார் அவர். இந்த ஆவணப்பட இயக்குநர் தொகுத்த ஒரு புத்தகமான விட்னெஸ், பல பத்தாண்டு களாக அமைதியின்மையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பள்ளத்தாக்கின் வழக்கமான பிம்பத்தை விட்டு விலகிச் சென்ற ஒன்பது காஷ்மீரி புகைப்படக்காரர்களின் (1986-2016) படைப்புகளைக் காட்சிப்படுத்துகிறது. “இந்தப் புத்தகம் மேலும் கூட்டுமுயற்சியின் ஒரு வகை மாதிரியையும் கொடுக்கிறது. இந்த ஒன்பது புகைப்படக்காரர்களும் ஒரு குழுவாக இல்லை அல்லது இனிமேலும் இருக்கப் போவதில்லை. ஆனால் அவர்கள் புத்தகத்துக்காகத் தமது படைப்பைப் பகிர்ந்து கொண்ட ஒரு பெருந் தன்மை ஒரு புதிய விஷயத்தை உருவக்கியது. அது “காஷ்மீரி புகைப்படங்கள்” என்று காணப் பட்டது என்று கூறுகிறார் காக். 2017இல் வெளி யிடப்பட்ட இந்தப் புத்தகம், எதிர்காலத்துக்கு மோதலின் வரலாற்றை ஆவணப்படுத்தும் ஒரே நோக்கத்துடன் ஒரு ஆவணக் காப்பகத்தின் பணியை எடுத்துக் கொண்டது. 2023இல், சூடானிலிருந்து 5000 கி.மீக்கு அப்பால் ஏப்ரல் மத்தியில் பல கலைக் கண்காட்சி களையும், கலாச்சார அருங்காட்சியங்களைக் கொண்டதுமான தலைநகர் கார்டோமில் கடுமை யான சண்டை மூண்டது. அதன் பாதிப்பை அவை சந்தித்தன. கொள்ளையடித்தலும், வன்முறை யும் பரவலாக நிகழ்ந்தன. ஜூனில் சூடானில் தேசிய அருங்காட்சியகத்தை ஆர்.எஸ்.எஃப் போராளிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அது முதல், தேசத்தின் கலாச்சாரப் பாரம்பரி யத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் கலைஞர் களாலும், பாதுகாப்பாளர்களாலும் ஒரே மாதிரி யாக நடந்தன. இந்த முயற்சியில் மறு வாழ்க்கை தேவைப்பட்ட சுமார் 150 சூடா னியக் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு காப்பாளர்கள் ரெஹீம் ஷதாத், ஆசா சாட்டி, மாசின் இஸ்மாயில் ஆகியோர் இணையதளம் மூலம் நிதி திரட்டினர். பின்னர் நிதிக்காக கெய்ரோ வில் ஓவியங்களைப் பதிப்பித்து விற்றனர். ஷதாத் அகதிகளுக்காக ஒரு கலைஞர்கள் வசிப்பிடத்தையும் தொடங்கினார். இந்த முயற்சி சில கலைஞர்கள் தமது பணியைத் தொடர்வ தற்காக கண்டத்தின் பிற பகுதிகளுக்குச் செல்ல உதவியது. நீட்டப்பட்ட காலங்களில் நம்பிக்கை என்பது ஒரு நிரந்தரமான உணர்வல்ல. எனினும் எது நிரந்தரமாக இருந்துள்ளது என்றால், உலகெங்கி லும் ஏராளமான துன்பங்கள் இருந்த போதி லும், கலைஞர்கள் தொடர்ந்து படைக்கிறார்கள். டியர் அல் பலாவில் பரௌடின் கோடுகள் எளி மையாகவும், கூர்மையாகவும் மாறியுள்ளன. அவரது படைப்புகளில் விரிவான, வண்ணமய மானவையெல்லாம் இப்போது இல்லை. மாறாக குறிப்பிட்ட பொருளுடைய குறியீடுகளை அவர் பயன்படுத்துகிறார்: பிறைகள், அம்புகள், துலிப் மலர்கள், கூடாரங்கள், உடல்கள். “உறுதிப்பாடு திரும்பிப் பார்க்காமல் இருப்பதாலோ அல்லது முன்னால் செல்வதாலோ வந்து விடாது. நான் முடிந்த வரை தொடரவும், உயிர் பிழைக்க முயல வும் உறுதியெடுத்துள்ளேன். நான் எனது துன்பத்தைத் தள்ளிப் போட முடிவெடுத்துள் ளேன்” என்கிறார் அவர்.
நன்றி: தி இந்து மேகசின், செப்டம்பர் 1, 2024
தமிழாக்கம்: கி.ரமேஷ்