கும்பகோணம், ஆக. 8- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பொது வசதி மைய கட்டிடத்தில், 11 ஆவது தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு கைத்தறி துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கைத்தறி கண்காட்சியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் துவக்கி வைத்து, கண்காட்சியினை பார்வையிட்டு நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க கைத்தறி துணை இயக்குநர் கு.சங்கரேஸ்வரி, கும்பகோணம் சரக கைத்தறி உதவி இயக்குநர் கி.ரமேஷ் மற்றும் சங்க அங்கத்தினர்கள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.