districts

img

விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வத்திற்கு பாராட்டு விழா

வேலூர், ஜூலை 3 -

     சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வத்திற்கு வேலூர் தலைமுறை பேரவை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

   விழாவில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தங்கபாலு, ஆர்எம்கே கல்வி குழுமத் தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம், தமிழ்நாடு ஓட்டல்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு, குடியாத்தம் கேஎம்ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விஐடி வேந்தர் விசுவநாதன் வெளி நாட்டில் இருப்பதால். ஜி.வி.செல்வத்தை பாராட்டுரை வீடியோவில் ஒளி பரப்பப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில்  ஜி.வி.செல்வத்தின் அவரது தாயார் ராஜேஸ்வரியின் வெண்கல சிலை நினைவு பரிசு வழங்கப்பட்டது.  

   நிகழ்ச்சி ஏற்பாட்டை தலைமுறை பேரவை நிர்வாகிகள் சீனிவாசன், பூமி நாதன், சீனிவாசன், மாறன், சதீஷ்குமார், சுந்தர் செய்திருந்தனர்.

;