‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சுற்றுலாத் துறை அமைச்சர் ஆய்வு
சேலம், செப்.20- சேலம் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்கள் மூலம் 9,552 பேர் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை செய்து, உரிய ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்துள்ளனர் என அமைச்சர் ரா.ராஜேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் வட்டாரம், மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனியன்று, “நலம் காக்கும் ஸ்டா லின்” மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனைசுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரா. பிருந்தாதேவி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். சிவ லிங்கம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “சேலம் மாவட்டத்தில் இதுவரை ஆறு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4,325 ஆண்களும், 5,227 பெண்க ளும் என மொத்தம் 9,552 பேர் கலந்துகொண்டு பயனடைந் துள்ளனர். இவர்களில் 7,427 பேருக்கு ரத்தப் பரிசோதனை யும், 5,603 பேருக்கு இ.சி.ஜி. பரிசோதனையும், 1,040 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையும், 1,143 பேருக்கு எக்கோ பரிசோதனையும், 787 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை யும் செய்யப்பட்டு, உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங் கப்பட்டுள்ளன,” என்றார்.
ரூ.30 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்
நாமக்கல், செப்.20- நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார். நாமக்கல் கோட்டம், சேந்தமங்கலம் உட்கோட்டத்தில் உள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, புதிய மலைப்பாதை அமைக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வந்தது. ரூ.13.05 கோடி மதிப்பீட்டில் 7.1 கி.மீ நீளத்திற்கு மண் பாதை அமைக்கும் பணி முடிவடைந்தது. இந்த மண் பாதை மழைக்காலங்களில் மண் அரிப்பு மற்றும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வாகனங்களில் செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, நைனாமலை வரதராஜ பெருமாள் கோவி லுக்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்ப டும் என முதல்வர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, இந்த மண் சாலையை தார் சாலையாக அமைப்பதற்காக வும், நெடுஞ்சாலைத் துறை மூலம் தொடர்ந்து பராமரிப் பதற்காகவும், நெடுஞ்சாலைத் துறைக்கு நில மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, சனி யன்று, நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.30 கோடி மதிப்பீட்டில் மண் மலைச்சாலையை 7.1 கி.மீ நீளத்திற்கு மேம்படுத்துதல், பாதுகாப்புப் பணிகள், வடிகால் அமைத்தல், குறுக்கு வடிகால் பணிகள் மற்றும் வாகன நிறுத்தம் அமைக்கும் பணியினை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், ஆட்சியர் துர்காமூர்த்தி, மாநிலங்க ளவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாடா ளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மரங்கள் வெட்டி சாய்ப்பு: விவசாயி புகார்
சேலம், செப்.20- தலைவாசல் அருகே சவுக்கு மரக் கன்றுகளை வெட்டி சாய்த்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் இளை யப்பன். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஒன்றை ஏக்கர் நில பரபப்பளவில் சவுக்கு மரக்கன்றுகள் வைத்துள்ளார். மேலும், பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்களையும் அமைத்துள்ளார். இந் நிலையில், நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்காணிப்பு கேம ராக்களை உடைத்து, சவுக்கு மரக்கன்று களை வெட்டி சாய்த்துள்ளனர். இதுகுறித்து ஆத்தூர் ஊரக போலீசாரிடம் புகாரளித் துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
சாலை விபத்து: ஓட்டுநர் கைது
நாமக்கல், செப்.20- குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி யதில், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் படுகாய மடைந்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வீராட்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சதா சிவம் (60). தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரான இவர் செப்.16 ஆம் தேதியன்று சேலம் - கோவை புறவழிச் சாலை, பல்லக்காபாளை யம் பிரிவு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன் றார். அப்போது அவ்வழி யாக வேகமாக வந்த அரசு நகரப் பேருந்து, இவரது வாகனம் மீது மோதியதில், சதாசிவம் பலத்த காயம டைந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், அரசு பேருந்து ஓட்டுநரான பச்சாம்பாளை யத்தைச் சேர்ந்த ராஜேந்தி ரன் (59) என்பவரை கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய மாநாடு
ஈரோடு, செப்.20- மாற்றுத்திறனாளிகள் சங்க சத்தியமங்கலம் ஒன்றிய மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஈரோடு மாவட் டம், சத்தியமங்கலம் ஒன்றிய 3 ஆவது மாநாடு வெள்ளியன்று நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் பி.ஆனந்தன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.மாரிமுத்து சிறப்புரை யாற்றினார். குத்தியாலத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலை வர் கே.ஆர்.திருத்தணிகாசலம், சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.மாரப்பன், விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.விஜய குமார், ஓய்வூதியர் சங்க தலைவர் பி.வாசுதேவன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் வி.ராஜூ ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், மாற்றுத்திறனாளி கள் அனைவருக்கும் ஆந்திராவைப் போல் உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும். 35 கிலோ அரிசி வழங்க வேண் டும். வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக பி.ஆனந்தன், செயலாளராக எஸ்.ஏ.ராம்தாஸ், பொருளாளராக அசன்கான் உள்ளிட்ட 16 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட் டது.
காட்டு யானை தாக்கியதில் கால்நடை மருத்துவர் படுகாயம்
கோவை, செப்.20- தேவராயபுரம் அருகே காட்டு யானை தாக்கி கால்நடை மருத்துவர் படுகாயமடைந்தார். கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தி வரும் “ரோலக்ஸ்” காட்டு யானையை பிடிக்க கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று இரவு தேவராயபுரம் அருகே முகாமிட்டிருந்த “ரோலக்ஸ்” யானைக்கு கால்நடை மருத்துவர் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் மயக்க ஊசி செலுத்த முயன்றனர். அப்போது சத்தத்தை கேட்டு மிரண்ட காட்டு யானை திடீரென பின்னோக்கி வந்து வனத்துறை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களை துரத்தியது. இதில் “ரோலக்ஸ்” யானை மருத்துவர் விஜயராகவனை தாக்கியது. அப்போது தவறி விழுந்த மருத்துவர் படுகாய மடைந்தார். உடனடியாக மருத்துவரை மீட்ட வனத்துறையி னர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகி றது.
காதல் தம்பதிக்கு கொலை மிரட்டல்: நான்கு பேர் கைது
கோவை, செப்.20- காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் பெண் ணின் பெற்றோர் உட்பட நான்கு பேரை போலீ சார் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பழனியாண்டி புதுரை சேர்ந்தவர் பவிப்பிரியா. இவர் சேதுபதி என்பவரை காத லித்து வந்தார். அவர்கள் இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இத னால் அவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைய டுத்து, பவிப்பிரியா, சேதுபதியை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து, வியாழனன்று பவிப்பிரியா தனது கணவருடன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் புகார் அளித்தார். அதில் சேதுபதி என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளாக காத லித்து வந்ததாகவும், தங்களின் காதலுக்கு தனதுபெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த தாகவும், வேறு நபருடன் திருமணம் ஏற்பாடு களை மேற்கொள்வதாகவும், தான் திரும ணம் செய்து கொண்ட நிலையில், பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, இவர்களிடம் இருந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார். இது குறித்து செட்டிபாளையம் காவல் துறை வழக்கு பதிவு செய்து தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண்ணின் தந்தை முருகேசன், தாய் செல்லம்மாள், சகோதரர் மணிவாசகம், உறவினர் முருகானந்தம் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.