districts

img

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திடுக - அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக. 8 – மதிப்பூதியம், தொகுப்பூதியம், ஒப்பந்த ஊதியம், அவுட்சோர்சிங்  ஒழித்து முறையான காலமுறை ஊதியம் வழங்க கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில்  தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. தமிழ்நாடு அரசு தற்போது அனைத்து துறைகளிலும், கொத் தடிமைக் கூலி முறைகளான தொகுப்பூதியம், மதிப்பூதியம்,  காண்ட்ராக்ட் என நியமனங்களை  செய்து வருகிறது. நிரந்திரப்பணி களை ஒழித்து, ஒப்பந்த பணி நியமனங்களை மேற்கொள்ளும் அரசின் நடவடிக்கையை கண் டித்தும், தமிழக முதல்வரின் தேர் தல் கால வாக்குறுதியை நிறை வேற்றக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதன்ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு அரசு  ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநில பொதுச் செயலாளர்  மு.சீனிவாசன், மாவட்டத் தலைவர்  எஸ்.ரமேஷ், மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோகரன் உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர். மாவட் டம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் திரளான அரசு ஊழி யர்கள் பங்கேற்றனர்.  தருமபுரி தருமபுரி மாவட்டம் முழுவதும், வட்டாட்சியர் அலுவலகம் உள் ளிட்ட அனைத்து அரசு அலுவல கம் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சுருளிநா தன், செயலாளர் ஏ.தெய்வானை, பொருளாளர் அன்பழகன், பொது நூலகத்துறை மாநில தலைவர் சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட் டங்களில் திரளானோர் பங்கேற்ற னர்.  சேலம் சேலம் மாவட்டத்தில்20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சேலம் மாவட்டம் மேட்டூர் கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின்  நிர்வாகி சிங்கராயன் தலைமை ஏற் றார். இதில், திரளானோர் பங்கேற்ற னர்.  கோவை கோவை மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள்  முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன், மாவட்டச்  செயலாளர் பி. செந்தில்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பங் கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டங்க ளில் திரளானோர் கலந்து கொண்ட னர்.