உடுமலை, ஆக.8- பிஏபி திட்டத்தில் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் பிரதான கால்வாயான காண்டூர் கால்வாயில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குட்டி ஆண் யானை ஒன்று விழுந்து உயிரிழந்துள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கை யில், உடுமலைப்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட திரு மூர்த்திமலை அணைப்பகுதியில் 8 ஆம் தேதி சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க ஆண் யானை குட்டி ஒன்று இறந்து கிடந்தது. இதையடுத்து யானைக்குட்டி உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. இந்த உடற்கூராய்வில் யானை குட்டி கால் தவறி காண்டூர் கால்வாயில் விழுந்து தண்ணீரில் அடித்து வரப்பட்டதால் நீரில் மூழ்கி சுவாசிக்க முடியாமல் இறந்திருக்க லாம் என தெரியவந்துள்ளது என்றனர்.