districts

img

கண்ணூர் பல்கலைக்கழக வளாகங்களிலும் இந்திய மாணவர் சங்கம் அமோக வெற்றி

கண்ணூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்  தலில் இந்திய மாணவர் சங்கம்  (எஸ்எப்ஐ) அமோக வெற்றி பெற்றது. தேர்தல் நடந்த 5 துறை மையங்களிலும் எஸ்எப்ஐ முழு வெற்றி பெற்றுள்ளது. காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு  மாவட்டங்களில் தேர்தல் நடந்த ஆறு வளாகங்களில் ஐந்தில் எஸ்எப்ஐ வெற்றி  பெற்றது. காசர்கோடு மஞ்சேஸ்வ ரம் வளாகத்தில் தேர்தல் நடத்தப்பட வில்லை.

அதே போல பையனூர் ஆனந்த தீர்த்த  வளாகத்திலும், மானந்தவாடி வளா கத்திலும் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ போட்டியின்றி வெற்றி பெற்  றது. மாங்காட்டுபரம்பு வளாகத்தில் தலை வர் பதவிக்கும், நீலேஸ்வரம் பி.கே.ராஜன் நினைவு வளாகத்தில் யூ.யூ.சி., பதவிக்கும் மட்டும் போட்டி நிலவியது. எஸ்எப்ஐ இரண்டு இடங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. போட்டி நடந்த ஆறு இடங்க ளில் பாலயாடு வளாகத்தில் அனைத்து இடங்களிலும் எஸ்எப்ஐ வெற்றிபெற்றது.

“பெரும் பொய்களுக்கு எதிராக போராடுக” என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்டது எஸ்எப்ஐ. வகுப்புவாதிகள் மற்றும் வலதுசாரி பிரச்  சாரகர்களுக்கு மதச்சார்பற்ற பதிலை  மாணவர்கள் தேர்தல் மூலம் அளித்த னர். இம்முறை கண்ணூர் பல்கலைக்கழ கத்தின் கீழ் உள்ள 65 கல்லூரிகளில் 45  கல்லூரிகளை எஸ்எப்ஐ வென்றது.