மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட 24 ஆவது மாநாடு எழுச்சியுடன் துவங்கியது.
கோவை வரதராஜபுரம் ஸ்ரீ சாய் விவாஹ ஹால் தோழர் யு.கே சிவஞானம் நினைவு அரங்கில் நடைபெற்றது.
மாநாட்டின் துவக்க நிகழ்வாக "கோவையின் வரலாற்றில் செங்கொடியின் சுவடுகளை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
கோவை வரதராஜபுரம் ஸ்ரீ சாய் விவாஹா மஹால் எதிரில் அமைக்கபட்டுள்ள கண்காட்சியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதனையடுத்து, சின்னியம்பாளையம் நினைவு ஜோதியை சூலூர் ஒன்றிய குழு செயலாளர் ஏ.சந்திரன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யு.கே வெள்ளையங்கிரி எடுத்து வர முன்னாள் மாநில குழு உறுப்பினர் என்.அமிர்தம் பெற்றுக்கொண்டார். ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் நினைவு ஜோதியை கோவை மேற்கு நகர குழு செயலாளர் பி.சி.முருகன் தலைமையில் எஸ்.ஆறுமுகம் நிறுத்துவர எஸ் கருப்பையா பெற்றுக்கொண்டார்.
மாநாட்டில் கட்சி கொடியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஏற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ராதிகா அஞ்சலி தீர்மானம் வாசித்தார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் வரவேற்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உவாசுகி துவக்கரையாற்றினார்.
மாநாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேரணி, பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் மசக்காளிப்பாளையம் மைதானத்தில் நடைபெறுகிறது.