சென்னை:
ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கு திங்களன்று (மே 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளை தொடர வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.‘தேசிய நிபுணர் குழு பரிந் துரை அளிக்கும் வரை மத்திய அரசு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளை செய்ய வேண்டும். ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் டிஆர்டிஓ மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவேண்டும். கொரோனா மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண் டும். மோசமான நிலை வராமல் மத்திய அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.