ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் 415 பக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம், அதன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தீர்ப்பில், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் மசோதாக்கள் மீது முடிவெடுக்கவில்லை என்றால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம் எனவும், மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.