சிஐடியு சிறப்பு பேரவை
திருப்பூர், ஏப்.12- பல்லகவுண்டம்பாளையத்தில் சக்தி ஆட்டோ காம்போ னென்ட் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலா ளர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து சிறப்பு பேரவை கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், பல்லகவுண்டம்பாளையம் சிஐ டியு இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடை பெற்ற இப்பேரவை கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆர். பழனிச் சாமி தலைமை வகித்தார். இப்பேரவையில், சக்தி ஆட்டோ நிறுவனத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றி புதனன்று பணி நிறைவு பெற்ற எம்.மனோகரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது. அவர் சங்க வளர்ச்சி நிதியாக ரூ.5000 தொகையை வழங்கி னார். சங்கத் தலைவர் ஆர். பழனிச்சாமி நிதியைப் பெற்றுக் கொண்டார். சந்திரமூர்த்தி, துணைச் செயலாளர் காமராஜ், துணைத் தலைவர் அர்ஜுனன், மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணையன் ஆகியோர் உடனிருந்தனர்.
நதி மாசுபாடு: கண்காணிப்புக்குழு அமைக்க கோரிக்கை
ஈரோடு, ஏப்.12– கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களின் முக் கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானி நதியில் அதிக ரித்து வரும் மாசுபாட்டை தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்று பவானி நதி பாதுகாப்பு கூட்டி யக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல் படும் பவானி நதி பாதுகாப்பு கூட்டியக்கத்தினர், முன்னாள் சிபிஐ சட்டமன்ற உறுப்பினர் சுந்தரம் தலைமையில் வெள்ளி யன்று தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்து சாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், பவானி நதி ஆலைக் கழிவுகள் மற்றும் நகராட்சி கழிவுகளால் தொடர்ந்து மாசடைந்து வருவதாகவும், இதனால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட் டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சிறு முகை மற்றும் ஆலாந்துறை பகுதிகளில் ஆற்று நீர் ஆரஞ்சு நிறமாக மாறியது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் மீண்டும் நீர் மாசுபட்டு துர் நாற்றம் வீசுவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, பவானி நதி நீரை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இந்த நடவடிக்கைகளை மாதந்தோறும் கண்கா ணிக்க நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும் பவானி நதி பாதுகாப்பு கூட்டியக் கத்தினர் மனு அளித்துள்ளனர்.
கன்றை வேட்டையாட முயற்சித்த சிறுத்தை
உதகை, ஏப்.12– உதகை அருகே உள்ள கல்லக்கொரை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை ஒன்று, கன்றுக் குட்டியை வேட்டையாட பின் தொடர்ந்து சென்றது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி உள்ளது. சமீப நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, மேட்டுச்சேரி, தீட்டுக்கல், எல்க்ஹில், நொண்டி மேடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நேரங்களில் சிறுத்தை கள் தோன்றியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், சனியன்று கல்லக்கொரை கிராமத்தில் ஒரு கன்றுக்குட்டி சாலையில் நடந்து செல்வதைக் கவனித்த சிறுத்தை ஒன்று, வேட்டையாடும் நோக்கில் அதை பின் தொடர்ந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இவ் விதமாக சுடுகாடுகளை விட்டு வெளியே வந்து குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் சுற்றித் திரிவது, பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே, இரு நாட்களுக்கு முன் தலையாட்டுமந்து பகுதியில் ஒரு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாயை சிறுத்தை கொன்று சென்ற காட்சிகளும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கண்காணித்து, கூண்டு அமைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
தெருநாய்கள் கடித்து ஆடுகள் பலி
கோபி, ஏப்.12– கோபி அருகே தெருநாய்கள் புகுந்து 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே சிறுவலூர் வாய் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா மற்றும் அவரது கண வர் ரஜேந்திரன் ஆகியோர் தங்களது தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்ற னர். வழக்கம்போல் வெள்ளியன்று மாலை ஆடுகளை மேய் ச்சலுக்கு விட்டு வந்த மஞ்சுளா, அவற்றை ஆட்டுப்பட்டியில் அடைத்துவிட்டு தூங்கச் சென்றார். நள்ளிரவில் ஆட்டுப்பட் டிக்குள் புகுந்த வெறிநாய்கள் அங்கிருந்த ஆடுகளை கடித்து குதறியதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும், இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் நாய்கள் தூக்கிச் சென் றுள்ளன. காலையில் ஆட்டுப்பட்டியை பார்த்த மஞ்சுளா அதிர்ச்சிய டைந்து, உடனடியாக வருவாய்த்துறை, கால்நடைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித் தார். சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர் உயிரி ழந்த ஆடுகளை பரிசோதனை செய்து நாய்கள் கடித்ததை உறுதி செய்தார். மேலும், உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரி வித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதி யில் அதிக அளவில் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின் றன. தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால், இர வில் ஆட்டுப்பட்டிகளில் புகுந்து ஆடுகளை கடித்து கொல் கின்றன. எனவே, தெருநாய்களின் தொல்லையை கட்டுப் படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண் டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.