இளைஞர் படுகொலை: வனத்துறையினர் மீது நடவடிக்கை
ஏமனூர் வனப்பகுதிக்கு விசா ரணைக்காக அழைத்து செல்லப் பட்ட இளைஞர் படுகொலை செய் யப்பட்ட நிலையில், இதில் தொடர் புடைய வனத்துறையினர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாக ரம் அருகே உள்ள ஏமனூர் வனப் பகுதியில் ஆண் யானை ஒன்று கொல்லப்பட்டு, அதன் தந்தங்கள் திருடப்பட்டன. இதையடுத்து ஏம னூர் அருகிலுள்ள கொங்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமார், அவரது தந்தை கோவிந்த ராஜ், சகோதரர் சக்தி ஆகியோரை கடந்த மார்ச் 17 ஆம் தேதியன்று பென்னாகரம் வனக்காவல் நிலை யத்திற்கு வனத்துறையினர் விசா ரணைக்காக அழைத்துச் சென்ற னர். அதன்பின் அவர்களைப் பற் றிய எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவர்களின் குடும்பத்தி னர் புகாரளித்ததன்பேரில், சக் தியை அவரது குடும்பத்தினரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். ஆனால், செந்தில்குமாரை ஒப் படைக்கவில்லை. யானை கொல் லப்பட்ட இடத்தில் விசாரிப்பதற் காக கைவிலங்குடன் அழைத்துச் சென்ற போது அவர் தப்பி ஓடிவிட்ட தாக வனத்துறையினர் தெரிவித்த னர். அதன்பின், 15 நாட்கள் கழித்து கொங்காரப்பட்டி வனப்பகுதியில் செந்தில்குமாரின் உடல் கிடைத்த தாக வனத்துறையினர் கூறியுள்ள னர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கு அடுத்த நாளே, செந்தில்குமாரை வனத்துறையி னர் கொலை செய்துள்ளதாக அவ ரது மனைவி புகாரளித்துள்ளார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சிபிசி ஐடி விசாரணையைத் துரிதப்ப டுத்தி படுகொலைக்குக் காரண மான வனத்துறையினரை கைது செய்ய வேண்டும். உயிரிழந்த செந்தில்குமார் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை வகித்தார். அப்போது, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்தி ரன் பேசுகையில், தருமபுரி மாவட் டத்தில் வனத்துறைக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் வாச்சாத்தி வன்கொடுமை நடந்தது. பாதிக்கப் பட்ட மக்களுக்காக மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி போராடி வர லாற்று தீர்ப்பை பெற்று தந்தது. வனத்துறையினரின் அத்துமீறலை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விவசாயிகள் சங்கமும் போராடி வெற்றி கண்டுள்ளது. பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட ஜிட்டாண்டஅள்ளி பகுதியில் அனு பவ நிலங்களிலிருந்து விவசாயி களை வெளியேற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. விசா ராணைக்கு அழைத்து செல்லப் பட்ட செந்தில்குமார் என்ற இளை ஞர் படுகொலைக்கு காரணமாக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி போராடும், என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சி யின் மாவட்டச் செயலாளர் இரா. சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம் பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மாரிமுத்து, சோ. அருச்சுனன், வே.விசுவநாதன், ஜி.சக்திவேல், இடைக்கமிட்டி செய லாளர்கள் ஆ.ஜீவானந்தம், எம். தங்கராசு, பி.ஆர்.செல்வம், ஆர். சக்திவேல், மாவட்டக்குழு உறுப் பினர்கள் எம்.குமார், பி.என்.முரு கன், சி.ராஜி, கே.அன்பு, ஆர்.சின்ன சாமி, எம்.வளர்மதி, பி.சக்கரவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.