tamilnadu

img

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப்.12- மோடி தலைமையிலான ஒன்றிய அரசு சமையல் எரிவாயு உருளை விலையை உயர்த்தி இருப்பதை கண்டித்து, திருப்பூரில் சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் வடக்கு மாநகரம் ராஜீவ் நகர் கிளை சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கிளைச் செயலாளர் சிவதாஸ் தலைமை ஏற் றார். கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகர குழு உறுப்பினர்கள் வீ.பால சுப்பிரமணி, ராம் ஆனந்த், ராஜேஷ், மாநகர செயலாளர் பா.செளந்தர ராசன் மற்றும் மூத்த தோழர் வீரமுத்து  ஆகியோர் உரையாற்றினர். இதே போல சாமுண்டிபுரம் பேருந்து நிறுத் தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், பாடை கட்டி எரிவாயு  சிலிண்டருக்கு மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு ஆர்ப்பாட்டம் இதேபோன்று, சமையல் எரி வாயு விலை உயர்வைக் கண்டித்து, சிஐடியு சேலம் ரயில்வே ஏற்றுமதி இறக்குமதி தொழிலாளர்கள் சங்கத் தினர், சேலம் ஜங்சன் கூட்செட் பகு தியில் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் உதவிச்செய லாளர் கே.எம்.மாரிமுத்து தலைமை வகித்தார். சங்கத்தின் தலைவர் ஆர். வெங்கடபதி, பொருளாளர் பி.சக்தி வேல், ஆட்டோத் தொழிலாளர் சங்க  மாவட்டச் செயலாளர் டி.உதய குமார், சுமைப்பணித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பி.மதியழகன், கோவிந்தராஜ், சுப்பிரமணி, சங்கர், முனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.