tamilnadu

img

ஒப்பந்ததாரர் காணாமல் போனதாக சிபிஎம் புகார்

ஒப்பந்ததாரர் காணாமல் போனதாக சிபிஎம் புகார்

பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி

சேலம், ஏப்.12- கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை பாதியில் நிற்கும் நிலையில், ஒப்பந்ததாரர் காணாமல் சென்றதாகக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார ளித்துள்ளனர். சேலம் மாநகராட்சி, 48 ஆவது வார்டுக்குட்பட்ட அன்ன தானப்பட்டி, நடுத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய்  அமைக்க தனியார் நிறுவனம் (பவம் கன்ஸ்ட்ரக்சன்) டெண் டர் எடுத்த நிலையில், தற்போது ஒன்றை மாதங்களுக்கு மேலாக அப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இத்திட் டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்துவிட்டு திட்டத்தை  முழுமையாக முடிக்காமல் பாதியில் விட்டு சென்ற ஒப்பந்த தாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காணாமல் சென்ற ஒப்பந்ததாரர் குறித்து தெரியவந்ததால், அவரை கண்டுபிடித்து தருமாறு அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனி யன்று புகாரளித்தனர். இந்நிகழ்வில், கட்சியின் சேலம் கிழக்கு மாநகரச் செயலாளர் கே.பச்சமுத்து, மாநகரக் குழு உறுப்பினர்கள் வி.பெரியசாமி, கே.வீரமணி, பி. திவ்யா, பிரபாகர், மோகன், மதியழகன், கோபி, ஆனந்த், குமரேசன், தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.