3 மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை
2 கிலோ மீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலம்!
நாமக்கல், ஏப்.12- மல்லசமுத்திரம் ஒன்றியத்திற் குட்பட்ட பகுதியில் 3 மாதங்க ளாக முறையான குடிநீர் விநியோ கம் செய்யாததால், நாள்தோறும் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று பொது மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு அருகே உள்ள மல்ல சமுத்திரம் ஒன்றியம், அவினாசி பட்டி ஊராட்சி, 6 ஆவது வார்டுக் குட்பட்ட பட்டியலின மக்கள் வசிக் கும் தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். விவசாயக்கூலி வேலை செய்து வரும் இப்பகுதி மக்க ளுக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் மீட்டர் கொள் ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டு குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வந் தது. இந்நிலையில், மேல்நிலைத் தொட்டி பழுதடைந்ததால் புதிய மேல்நிலைத் தொட்டி 30 ஆயிரம் மீட்டர் கொள்ளளவில் அமைக்கப் பட்டுள்ளது. இரண்டு மேல்நி லைத் தொட்டிகள் இருந்தும், இப் பகுதி மக்களுக்கு முறையான குடி நீர் விநியோகம் செய்வதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருகிறது. மேலும், சில நேரங்களில் பழுத டையும் குடிநீர் குழாய்களை உட னடியாக சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் பொது மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகை யில், எங்கள் பகுதியில் கடந்த மூன்று மாத காலமாகவே முறை யாக குடிநீர் விநியோகம் செய்யப் படவில்லை. இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம், இரு சக்கர வாகனத்தில் சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள் ளது. தேவையான குடிநீர் கிடைக் காததால் உரிய நேரத்தில் வேலைக்கு செல்வது, குழந்தை களை பள்ளிக்கு அனுப்புவது போன்ற பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகிறது. மேலும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது எரிபொருள் செலவு கூடுதலாகி வருகிறது. பெரும் சிர மத்தை சந்தித்து வரும் எங்க ளுக்கு முறையாக குடிநீர் விநியோ கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.