tamilnadu

img

விசைத்தறியாளர்கள் 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்

விசைத்தறியாளர்கள் 2 ஆவது நாளாக உண்ணாவிரதம்

சட்டப் பாதுகாப்புடன் நெசவுக் கூலி  உயர்வு வழங்கக் கோரி, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய் யும் விசைத்தறி உரிமையாளர்கள் சனி யன்று இரண்டாவது நாளாக உண்ணா விரதப் போராட்டத்தை மேற்கொண்ட னர். சோமனூர் கருமத்தம்பட்டி சாலை யில் இரண்டாவது நாளாக சனியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற் றது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட் டமைப்பு சார்பில் சோமனூர் சங்கச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் சோம னூர், தெக்கலூர், அவிநாசி, புதுப் பாளையம், கண்ணம்பாளையம், பெரு மாநல்லூர் உள்ளிட்ட  பகுதிகளில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். சோமனூர் தலைவர் பூபதி, தெக்க லூர் பொன்னுசாமி, அவிநாசி முத்து சாமி, புதுப்பாளையம் நடராஜ், கண் ணம்பாளையம் வேலுச்சாமி, பெரு மாநல்லூர் ராமசாமி ஆகியோர் உள்பட  அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இரண்டாவது நாள் உண்ணாவிர தத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி, உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, விவசா யிகள் பாதுகாப்புச் சங்க நிறுவனர் மு. ஈசன் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகி கள் போராட்டத்தை வாழ்த்திப் பேசி னர்.