tamilnadu

img

22 பெண் நடத்துநர்களுக்கு பணி நியமன ஆணை

22 பெண் நடத்துநர்களுக்கு பணி நியமன ஆணை

கோவை, ஏப்.12– தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு முக்கியமான படி – 22 பெண் நடத்துநர்களுடன் சேர்த்து மொத் தம் 44 புதிய நியமனங்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சிவ சங்கர் வழங்கினார். இந்த சிறப்பு நிகழ்வு கோவையில் உள்ள இராம நாதபுரம் சுங்கம் போக்குவரத்து பணிமனையில் சனியன்று நடை பெற்றது. தமிழ்நாடு அரசு 2024 - 25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு அரசு, கோவை மண்டலத்திற்கு 321 புதிய பேருந்துகளை ஒதுக்கியுள்ளது. இதில் முதல்கட்டமாக கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் 13  புதிய அரசு பேருந்துகளை அமைச் சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், பேசிய அமைச்சர் சிவசங்கர், “தற்போதைய ஆட்சி  பொறுப்பேற்ற பிறகு, தற்போது  வரை ஆயிரம் பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப் பட்டுள்ளது. இது முக்கியமான சாதனையாகும். மேலும், பெண்க ளுக்கு பணி வாய்ப்புகளை வழங் கும் நோக்கில், அவர்களின் உயரத் தகுதியை 10 செ.மீ குறைத்து, இளைய தலைமுறைக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி உள் ளோம்” என்றார். “பொதுத்துறை போக்குவ ரத்தை தனியார்மயமாக்கும் நோக் குடன் அரசு செயல்படுகின்றது என் கிற வதந்திகள் பரவி வரும் நிலை யில், புதிய பேருந்துகள் வாங்கப் படுவதும், ஊழியர்கள் நியமிக்கப் படுவதும் அரசு இந்த துறையை வலுப்படுத்தும் நோக்கில் செயல் படுகிறது என்பதை தெளிவுபடுத் துகிறது. முதல்வர் துறை நெருக் கடிகளை தீர்க்க ‘விடியல் பயண நிதி’ உள்ளிட்ட பல்வேறு நிதிகளை  ஒதுக்கி வருவதாகவும், கருணை  அடிப்படையில் பணி நியமனம் பெற் றோரின் குடும்பத்தினர், நெருக்கடி யான சூழ்நிலையிலிருந்து மீண்டு வாழ்வாதாரத்தை பெறுவதை அரசு  உறுதி செய்யும் வகையில் நடவ டிக்கைகள் மேற்கொண்டு வருகி றோம்.  பெண்களுக்கு நடத்துநர் வேலை சவாலானதுதான். ஆனால்  தன்னம்பிக்கையுடன் மேற்கொண் டால் அதனை திறம்பட ஆற்ற முடியும், என்றார். முன்னதாக இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி  ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.