court

img

ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

புதுதில்லி,ஏப்.08- தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத வழக்கில், ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை சிபிஎம் வரவேற்றுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது.
மோடி அரசுக்கு ஒரு பெரிய அடி!
வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு!
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் மறுத்தது சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இதை நாங்கள் வரவேற்கிறோம்.
கேரளா மற்றும் பாஜக ஆட்சி செய்யாத பிற மாநிலங்களும் மத்திய அரசின் உத்தரவுப்படி செயல்படும் ஆளுநர்களால் இதே போன்ற சட்டவிரோத செயல்களைச் சந்தித்துள்ளன. இந்த தீர்ப்பு ஜனநாயகத்தையும் கூட்டாட்சி முறையையும் உறுதிப்படுத்துகிறது. என சிபிஎம் திமுக அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.