புதுதில்லி,ஏப்.08- உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாகச் சீர்குலைந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
கடனாகப் பெற்ற பணத்தை திருப்பித் தரவில்லை என்ற சிவில் பிரச்சனையை கிரிமினல் வழக்காக மாற்றிய உச்சநீதிமன்றம் போலீசாருக்கு எதிரான வழக்கினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரித்தார்.
அப்போது பேசிய அவர் சாதாரணமான உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மொத்தமாகவே சீர்குலைந்துவிட்டது சிவில் வழக்குகளைக் கூட குற்ற வழக்குகளாக மாற்றுகின்றனர். பணம் திருப்பித் தரவில்லை என்பது குற்ற வழக்காகக் கருத முடியாது என்றும் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியும் மீண்டும் இதையே செய்வதா? எனக் கேள்வி எழுப்பியதுடன் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், நொய்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.