court

img

இருமல் மருந்தால் உயிரிழப்பு - சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

மத்தியப் பிரதேசத்தில், 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து உட்கொண்ட 22 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இது தொடர்பன நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையின் கீழ், பாரபட்சமற்ற, ஒருங்கிணைந்த விசாரணையை உறுதி செய்வதற்காக சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், கோல்ட்ரிப்' இருமல் மருந்தை உடனடியாக திரும்பப் பெறவும், பறிமுதல் செய்யவும், விற்பனை மற்றும் விநியோகத்தைத் தடை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் கே.வினோத் சந்திரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இவ்விவகாரத்தை மாநிலங்கள் விசாரிக்க தகுதியுடையவை என்றும், அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும், செய்தித்தாள் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே மனுதாரர் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ததாக வாதித்த நிலையில், இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.