முதுநிலை ஆசிரியர் பட்டதாரி தேர்வு ஒத்திவைக்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரித்துள்ளது.
புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வுக்குத் தயாராக முடியவில்லை எனவே தேர்வை ரத்து செய்யும் படி மனுதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணையில் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டது என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பில் அக.12 ஆம் தேதி திட்டமிட்டபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் போட்டித் தேர்வைத் தள்ளி வைக்கும்படி உத்தரவிட முடியாது என வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.