உச்ச நீதிமன்றத்தில் வளாகத்திற்குள் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அறிவித்துள்ளார்.
டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் மனுதாரர்கள் இலவசமாக இணைய சேவையை பயன்படுத்தும் வகையில் வைஃபை (WiFi) சேவை வழங்கப்படும் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, நீதிமன்ற அறைகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளுக்குள் மட்டுமே WiFi வசதி வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.