court

img

சோனம் வாங்சுக் கைது - ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்!

லடாக்கில் ஏற்பட்ட வன்முறையை காரணம் காட்டி காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லடாக்கில் ஏற்பட்ட வன்முறையை முன்னிட்டு, அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) கீழ் கைது செய்யப்பட்டார்.
சோனம் வாங்சுக் மீது கடுமையான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (NSA) மேற்கொள்ளப்பட்ட தடுத்துவைத்தலை எதிர்த்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அவரது மனைவி கீதாஞ்சலி ஜே. அங்க்மோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அரவிந்த்குமார் மற்றும் என்.வி. அஞ்சாரியா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கான விவரங்களுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.மேலும் வழக்கை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.