world

img

இந்தோனேசியா பள்ளி கட்டிட விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ கடந்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ கடந்துள்ளது.

இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இஸ்லாமியர் உறைவிடப் பள்ளிக் கட்டிடம் கடந்த செப். 29 அன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சிக்கினர்.

இதனைத் தொடர்ந்து ஒரு வார காலமாக மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 50 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கிய 13 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

அல் கோசினி பள்ளியின் அடித்தளத்தால் தாங்க முடியாத அளவுக்கு, மேல் தங்களில் கட்டுமானப் பணிகள் நடந்ததே இடிந்து விழுந்ததற்கான காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.