court

img

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயற்சி!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு வழக்குகளின் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது, தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் காலணி வீச முயன்றார். அப்போது, நீதிமன்ற பாதுகாவலர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை தடுத்து அவரை வெளியேற்றினர். வெளியே சென்றபோது, ‘சனாதன தர்மத்தை அவமதித்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்' என அந்த நபர் கூச்சலிட்டபடி சென்றார். 
இச்சம்பவத்தை தொடர்ந்து “இதிலெல்லாம் நாம் நமது கவனத்தை சிதறவிடக் கூடாது, இது என்னை எவ்விதத்திலும் பாதிக்காது” என தலைமை நீதிபதி கவாய் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோவில் 7 அடி உயரமுள்ள விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, ​​தலைமை நீதிபதியின் கருத்துக்களால் வழக்கறிஞர் அதிருப்தி அடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.