ஜிஎஸ்டி குறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், விலைவாசி குறையும் என்று பிரதமர் மற்றும் ஒன்றிய நிதியமைச்சர் ஆகியோர் செய்த தம்பட்டத்தின் உண்மை நிலை என்ன? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது. எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பாஜக தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா? என தெரிவித்துள்ளார்