சுதந்திர பாலஸ்தீனம் என்று எழுதிய மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாணவர்கள் மூவர், விடுதி சுவர்களில் ஜெய்பீம், சுதந்திர பாலஸ்தீனம் என எழுதியதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மூன்று மாணவர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அவர்களது இடைநீக்க உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.