india

img

இமயமலையில் விரிவடையும் பனிப்பாறைகள் – மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை

இமயமலையின் இந்திய பகுதியில் 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்துள்ளது என்று மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மத்திய நீர் ஆணையத்தின், பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் குறித்த ஜூன் 2025 அறிக்கையில், லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும்

இமயமலையின் இந்திய பகுதியில் உள்ள 681 பனிப்பாறை ஏரிகளில், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், லடாக், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 432 பனிப்பாறை ஏரிகளில் நீர் பரவல் அளவு அதிகரித்துள்ளது என  மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அருணாச்சலப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான ஏரிகள் (197) விரிவடைந்துள்ளன. அதைத் தொடர்ந்து லடாக்கில் 120 ஏரிகளும், ஜம்மு காஷ்மீரில் 57 ஏரிகளும், சிக்கிம்மில் 47 ஏரிகளும், இமாச்சலப் பிரதேசம் (6) ஏரிகளும் மற்றும் உத்தரகண்ட்டில் 5 ஏரிகளும் விரிவடைந்து காணப்படுகிறது.. ஒட்டுமொத்தமாக, இமயமலைப் பகுதி முழுவதும், கண்காணிக்கப்பட்ட 2,843 ஏரிகளில் 1,435 பனிப்பாறை ஏரிகள் ஜூன் 2025 இல் விரிவடைந்தன.

இந்தப் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நிகழ்நேர கண்காணிப்பு, செயற்கைக்கோள் அடிப்படையிலான எச்சரிக்கைகள் மற்றும் கீழ்நிலை சமூகங்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் உள்ளிட்ட அவசர தயார்நிலை நடவடிக்கைகளை மத்திய நீர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.