புதுதில்லியில், 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது.
புதுதில்லியில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இன்று தொடங்கிய இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர்.
ஜி.எஸ்.டி வரியை 5 மற்றும் 18 சதவிகிதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. டிவி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஜவுளி, ரெடிமேட் ஆடைகள், காலணிகள், உரம், ஷாம்பூ, சோப்பு, பற்பசை, டயர், டிராக்டர், மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 5% ஆக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.