விளையாட்டு வீரர்கள் பேருக்கு தமிழ்நாடு அரசு அரசுப் பணி வழங்கியுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சாதனை புரிந்த 8 பேர் கொண்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு அரசுப்பணியை வழங்கியுள்ளது.
விளையாட்டிற்கான 3% இடஒதுக்கீட்டின் கீழ், இவர்களுக்கு வருவாய்துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பிரிவுகளில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.