world

img

பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானின் தலைநகர் குவெட்டாவில் பாகிஸ்தானின் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு பேரணி நடத்தப்பட்டது. அந்த பேரணியில் திடீரென நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் போலீசார் விசாரணி மேற்கொண்டுள்ளனர்.