சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிப்பின்போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பணியில் இருந்த தொழிலாளர்கள் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்த வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, சிவகாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.