சிஐடியு மாநில மாநாட்டு இலச்சினை வெளியீடு!
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தமிழ்நாடு மாநில 16-ஆவது மாநாடு நவம்பர் 6 முதல் 9 வரை கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், புதன்கிழமையன்று திருப்பூரில் நடைபெற்ற சிஐடியு மாநிலக் குழு கூட்டத்தில், மாநில மாநாட்டுக்கான இலச்சினை வெளியிடப்பட்டது. மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், துணைப் பொதுச்செயலாளர்கள் வி. குமார், கே. திருச்செல்வன், எஸ். கண்ணன், கே. ஆறுமுக நயினார் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.